வேட்பாளர் தொடர்பில் முடிவில்லை!

-நஜீப்-

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரோமதாச என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இது குறித்து அந்தக் கூட்டணித் தலைவர்களிடம் நாம் விசாரித்தால் அப்படியானதொரு தீர்மானத்தை ஒரு போதும் எடுக்கவில்லை.

அத்துடன் அது பற்றி நாம் இதுவரை கலந்து பேசக்கூட இல்லை என்று உறுதி செய்கின்றார்கள். மனோ கணேசன் இது பற்றிக் கூறும் போது கட்சி என்ற ரீதியில் அவர்களுக்கு அப்படித் தீர்மானம் எடுக்கும் உரிமை இருக்கின்றது. அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. கூட்டணியின் கருத்தல்ல என்றும் தெரிவிக்கின்றார்.

இதுவரை எந்தக் கட்சியும் தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் முண்டியடித்தக் கொண்டு செய்த இந்த அறிவிப்பு அந்தக் கட்சியின் முதிர்ச்சியற்ற அரசியல் செயல்பாட்டின் வெளிப்பாடாகவே அரசியல் விமர்சகர்களினால் பார்க்கப்படுகின்றது.

அந்தக் கட்சியில் மிகச் சிறந்த வேட்பாளர் என்று பார்க்கும் போது அதில் சஜித் பெயர் இல்லை. பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்க சஜித்தை விட ஆளுமை உள்ள வேட்பாளர் என்ற ஒரு கருத்து கட்சிக்குள்ளும் வெளியிலும் இருந்து வருகின்றது. இதனால்தான் சஜித் தனது பெயரை கட்சி வேட்பாளர் என்று அறிமுகம் செய்திருக்கின்றார்.

Previous Story

டாக்டர் சாபி ஏன் அழுதார்!

Next Story

ஜோர்டான் இளவரசர் சவுதி கட்டிடக் கலை நிபுணரை மணந்த