வேட்டையும் சிவில் யுத்தமும்!

-நஜீப்-

நாட்டில் ஸ்தீரமான ஒரு அரசு இருந்தல் மட்டுமே சர்வதேச உதவிகளுக்கான கதவுகள் திறக்கப்படும் என்று பலமுறை இலங்கைக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் உள்நாட்டு நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளின் செயல்களையும் பார்க்கின்ற போது அந்த உபதேசங்களை எவரும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.

எனவேதான் அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் தற்போது வன்முறையில் காலத்தை ஓட்ட நினைக்கின்றார்கள். இது நாட்டின் பொருளாதாரத்தை சம்பலாக்கி விடும். ஏற்கெனவே அது தவிடு பொடி என்ற நிலையில் இருக்கின்றது.

ரணிலை ஜனாதிபதியாக்கியதன் மூலம் ஆளும் மொட்டுக் கட்சியினர் தமது அட்டகாசத்தை மீண்டும் தொடரலாம் பொது மக்களையும் போராட்டகாரர்களையும் அடக்லாம் நசுக்கலாம் என்று நினைக்கின்றார்கள்.

ஜனாதிபதி ரணிலை வைத்து இந்த வேட்டையை வெற்றிகரமாக நடத்தலாம் என்று முட்டால்தனமான பெரும்பான்யினர் கருதுகின்றனார். ஆனால் பிரதமர் தினேஷ் இது விடயத்தில் மென் போக்கில் காரியம் பார்க்க முனைவது போல் தெரிகின்றது.

மொட்டுக் கட்சியைப் பொருத்தவரை அடக்கு முறையில் காரியம் பார்ப்பத்தில்தான் பெரும்பான்மையினர் குறியாக இருக்கின்றார்கள். எனவே வசுதேவ வழக்கமாகச் சொல்வது போல் நாட்டில் சிவில் யுத்தத்துக்கும் வாய்ப்பு இருக்கின்றது.

நன்றி:31.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மொட்டுக் கட்சியில் இன்னும் பலருக்கு அமைச்சு 

Next Story

வங்கதேசத்தில் பஸ் மீது ரயில் மோதி 11 பேர் உயிரிழப்பு