நஜீப்
நன்றி:01.02.2026 ஞாயிறு தினக்குரல்
ஒரு சமூகத்தின் விமோசனம் அந்த இனத்தில் வாழ்கின்ற புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களின் செயல்பாடுகளில் தான் தங்கி இருக்கின்றது. ஜனநாயக ரீதியிலான தமிழர்களின் மிகப் பெரும் அரசியல் இயக்கம் இன்றுவரை தமிழரசுக் கட்சிதான். (பிரபா காலம் விதிவிலக்கு)
ஆனால் அந்த அமைப்புக்குள் தனி மனித செல்வாக்கும் குரோதங்களும் தான் இன்று கொடிகட்டிப் பறக்கின்றது. ஆனால் நாம் மேற்சொன்ன தீர்க்கமான சக்திகள் இவற்றைக் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
இது ஓர் சமூகத்தின் ஆரோக்கியமான ஒரு செயல்பாடாகத் தெரியவில்லை. சிரிதரன் தொடர்பில் சுமந்திரன் ஒன்றைக் கூற தமிழரசுத் தலைமைக்கு உரிமைகோருபவிர் அதற்கு நேர்மாற்றமாக ஒன்றை சொல்கின்றார். இது என்ன வேடிக்கை.? என்ன கட்சி? என்ன கூட்டம்.?
இந்த முரண்பாட்டிலிருந்து கட்சி தனிநபர் கைகளில் இருப்பது உறுதியாகின்றது. செயற்குழுக்குள்ளே இந்த முரண்பாடு. இதில் ஒட்டுமொத்த கட்சிப் பேராளர் நிலைப்பாடுகள் என்ன?





