வீட்டுக்கு ஒரு விமானம்.!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள கேமரான் ஏர்பார்க் கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறார்களாம். அந்த காலத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கால்நடைகளாகவும் மாட்டு வண்டிகளிலும் சென்று வந்தனர்.

நாளடைவில் பொது போக்குவரத்து, சைக்கிள், ஆட்டோ ரிக்ஷா, கார் என போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. ACல இருந்து DC வரை இருக்கோம்.. எங்க பிரச்சினையை யாரும் தீர்க்கலை.. எர்த் இருக்கு! குமுறும் காவலர் ஒவ்வொரு வீட்டிலும் சைக்கிள் இருந்த காலம் போய் டூவிலர்கள் வந்தன. தற்போது அவையும் போய் வீட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு காராவது இருக்கிறது.

பக்கத்து கடைக்கு போக வேண்டுமானால் கூட காரில்தான் பயணிக்கிறார்கள். போக்குவரத்து பாதிப்பு என இருந்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரே இடத்திற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களில் வருகிறார்கள்.

What It's Like to Live in California Neighborhood Designed for Pilots

சரி விஷயத்திற்கு வருவோம். அமெரிக்காவில் ஒரு கிராமத்தில் வீட்டிற்கு ஒரு விமானம் இருக்கிறதாமே தெரியுமா? நிச்சயமாகத்தான் சொல்கிறோம். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரான் ஏர்பார்க் கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக விமானங்களை பயன்படுத்துகிறார்களாம்.

இந்த கிராமத்தில் வேலைக்கு செல்லவும் அலுவலகத்திற்கு செல்லவும் விமானத்தில்தான் பயணிக்கிறார்களாம். அந்த தெருவை கழுகு பார்வையில் பார்த்தால் விமான நிலையம் போல் காட்சியளிக்கிறது.

விமானம் வைத்திருக்க விமான ஓட்டிகளுக்கான லைசன்ஸ் மற்றும் விமானத்தை இயக்குவது குறித்த விவரங்களை தெரிந்தவர்கள் மட்டுமே விமானம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த கேமரான் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற விமானிகளாக இருக்கிறார்கள்.

Residents Of THIS California Town Own Airplanes More Than Cars And They Use Them To Travel To Work

இவர்களுடன் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் 1963 கட்டமைக்கப்பட்டது. இங்கு மொத்தம் 124 வீடுகள் உள்ளன. விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறக்கவும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

What It's Like to Live in California Neighborhood Designed for Pilots

இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்கா விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்தது. இந்த நிலையில்தான் இந்த விமான நிலையங்களை ஓய்வு பெற்ற ராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமான பூங்காவாக மேம்படுத்த அந்த நாட்டின் விமான போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதனால்தான் வீட்டிற்கு ஒரு விமானம் வைத்திருக்கிறார்கள்.

விமானங்களை வாடகைக்கும் கொடுக்கிறார்களாம். யாருக்காவது கற்று கொடுக்க வேண்டுமானால் அதையும் கட்டணத்திற்கு கற்று கொடுக்கிறார்கள்.

Previous Story

வயசு வெறும் 19 தான்!ரூ.114550 கோடிக்கு அதிபதி!

Next Story

வாழ்வுக்கு போராடும் அரசியல் கட்சிகள்!