விலகு விலகாதே அதிரடி!

-நஜீப்-

புதிய ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் நியமனங்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தாலும் அது இன்றுவரை நடைபெறவில்லை. இங்கிலாந்து முடி விழாவுக்கு ஜனாதிபதி போக அவரது கொழும்பு அலுவலகம் பதவியில் இருக்கின்ற ஆளுநர் பலருக்கு விலகுமாறு கட்டளையிட்டது.

இந்த ஏற்பாடு ரணில் ஜனாதிபதியாக பதவி ஏற்ற போது ரணில்-ராஜபக்ஸ இடையில் எட்டபட்ட தீர்மானம். விலகுவோருக்கப் பதிலாக ரணிலின் கையாட்கள் பலர் நியமிக்கப்பட இருந்தார்கள். ஆனால் அப்படி பதவி விலகுமாறு கேட்கப்பட்ட எவருமே இதுவரை பதவி துறக்கவில்லை.

இராஜினாமச் செய்ய தயாரான சிலருக்குக் கூட விலக வேண்டாம் என்ற உத்தரவு. தமது பட்டியலுக்கு ரணில் அமைச்சர்களை நியமனம் செய்யததால் மொட்டு கேட்பதார் பசில் போட்ட கட்டளை இது என்றும் தகவல். எனவே ஐதேக. பட்டியலுக்கு ஆளுநர் பதவியா?

அப்படியாக இருந்தால் நமது ஆட்களுக்கு முதலில் அமைச்சுக் கொடு என்ற பிடிதான் இதில் இறுகி இருக்கின்றது. பதவி ஏற்க கோட்டும் சூட்டும் தைத்தவர்கள் இப்போ அதனை போட்டு போட்டு அழகு பார்க்கின்றார்கலாம்! ‘காத்தான்’ ஹீரோவுக்கும் பதவியாம்.!

நன்றி: 14.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஃபர்ஹானா - சினிமா விமர்சனம்

Next Story

சிறையில் இம்ரானை கொலை செய்ய சதி” - வழக்கறிஞர் குற்றச்சாட்டு