விராட் கோலியைக் காணவில்லை!!

போன் ஸ்விட்ச் ஆஃப்

தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட இந்திய அணி வீரர்கள் அனைவரும் டிசம்பர் 12 ( நேற்றுக்குள்) மும்பையில் உள்ள தனியார் ஓட்டலின் பயோ பபுளுக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட அனைவரும் சென்றுவிட்ட நிலையில் கேப்டன் விராட் கோலி மட்டும் இன்னும் பபுளுக்குள் செல்லவில்லை. மும்பையில் 3 நாட்கள் பபுளுக்கு பிறகு வரும் டிசம்பர் 16ம் தேதியன்று தனி விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா செல்கின்றனர்.

 

இதனால் கோலி பங்கேற்கிறாரா இல்லையா என்ற குழப்பம் எழுந்துள்ளது. கோலியின் முடிவு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். கோலிக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தும், அதிகாரத்தை பயன்படுத்தி பிசிசிஐ பதவி பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. மேலும் கோலி அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிகிறது.

நீடிக்கும் குழப்பம் பிசிசிஐ சார்பில் அதிகாரிகள் பலரும் விராட் கோலியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பார்த்துள்ளனர். ஆனால் அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற தொடர்புகளில் அழைப்பினை ஏற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் கோலி பங்கேற்பாரா என்பதிலேயே குழப்பம் நீடிக்கிறது.

 

பிசிசிஐ விளக்கம் இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பதிலில், விராட் கோலி இன்றைக்குள் அணியின் பபுளுக்கு வந்துவிடுவார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவரின் வருகை தாமதமாவதாக கூறப்பட்டுள்ளது.எனினும் விராட் கோலி கோபத்துடன் இருப்பது தெளிவாகதெரிகிறது.

Previous Story

2 இலங்கையர்கள் அமெரிக்கா நுழைய தடை!

Next Story

21 ஆண்டுகளுக்கு பின் இந்தியா-மிஸ் யுனிவர்ஸ்