விஜேவீரவுடன் முஸ்தபா இணைவு!

நஜீப்

ஜேவிபி தலைவர் றோஹன விஜேவீர சிறையிலிருந்து விடுதலையாகி முதல் முறையாக 1982ல் ஜனாதிபதி தேர்தலில் நின்றார். அவர் அதற்காக சூறாவளிப் பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்ட போது இன்று போல் அன்றும் கூட்டம் அலை மோதி இருக்கின்றது. இப்படி ஒரு மாபெரும் கூட்டம் அன்று கிழக்கே சாய்ந்தமருதுவிலும் நடந்தது.

கூட்டத்தை முடித்துக் கொண்டு கொழும்பு வந்த விஜேவீராவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நிந்தவூர் முஸ்தபா எம்.பி. இந்த தேர்தலில் நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அப்போது உங்கள் கட்சியில் தேர்தலில் நிற்க எனக்கு ஒரு வாய்ப்புத் தரவேண்டும் என்று கேட்டிருக்கின்றார். இதே போன்று களுத்துரை ரெஜினோல்ட் குரோயும் நம்பினார்.

இந்தக் கதைகளின் பின்னணியில் நான் விஜேவீரவிடம் எமக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்று கேட்டேன். அப்போது டொக்டர் நீங்களே  சொல்லுங்கள் என்றார். நான் ஒரு பத்து இலட்சம் வரை என்றேன். அப்போது அவர் கூட்டத்தைப் பார்த்து கணக்குப் போட வேண்டாம்.

ஒரு இரண்டரை இலட்சம் வரைதான் தேரும் என்றார். அதுதான் நடந்து. இங்கிலாந்துப் பல்கலைக் கழகத்தில் இன்றும் பேராசிரியராக இருக்கும் அதுல சுமத்திபல, இவர் விஜேவீரவின் வைத்தியரும் தேர்தலில் அவருடன் கூட இருந்தவரும். அவர்தான் இந்தத் கதையை நமக்குச் சொன்னார்.

நன்றி: 09.04.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அல்-அக்ஸா மசூதிக்காக முட்டிக்கொள்ளும் முஸ்லிம்களும் யூதர்களும்: என்ன காரணம்?

Next Story

தூதரகங்களை மீண்டும் திறக்க சவுதி, ஈரான் சம்மதம் - சீன முயற்சிக்கு வெற்றி!