விஜேவீர கடைசி 48 மணி நேரங்கள்!

-நஜீப் பின் கபூர்-

இதற்கு முன்னர் நாம் மக்கள் விடுதலை முன்னணி அல்லது ஜேவிபி. தலைவர் றோஹன விஜேவீர பற்றி பல கட்டுரைகளை நமது குரலுக்காக எழுதி இருக்கின்றோம். அதிலொன்று அவர் கைதாகி வழக்குக்காக நுவரெலிய சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட போது நடந்த உணர்வுபூர்வமான தகவல்கள் பற்றியது. தனது மகனை பார்க்க இவ்வளவு இளைஞர்கள் -மக்கள் ஒன்று கூடியிருந்ததை பார்த்த அவரது தாயார் அப்போதுதான் தெரிந்து கொண்டார், தனது மகன் ஒரு அரசியல் தலைவன் என்பதை. அதுவரைக்கும் அவருக்குப் பின்னாள் இவ்வளவு பெரிய ஒரு கூட்டம் இருப்பதை அவர் தாயார் தெரிந்து வைத்திருக்கவில்லை.

அடுத்தது அவர் உலப்பனையில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு-பெரள்ளை கனத்தை மைதானத்துக்கு குற்றுயிராய் இருந்த போது அவரது கட்சிக்காரர் ஒருவரே அங்கு இராணுவப் புகைப்படக்காரனாக நின்று பின்னர் அந்தக் காட்சிகளை நேரடியாகப் பார்த்து சொன்ன தகவல்கள் பற்றியும் நாம் ஒரு முறை முன்பு பேசி இருக்கின்றோம். பின்னர் இந்திரானந்த சில்வா என்ற அந்த சிப்பாய் வட மத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஜேவிபி மாகாணசபை உறுப்பினராகவும் இருந்த செய்திகளையும் நாம் அதில்  சொல்லி இருந்தோம். அந்த வரிசையில் இப்போது மேலும் ஒரு புதிய தகவலை நாம் இன்று சொல்ல எதிர் பார்க்கின்றோம்.

இது வரை இந்தக் கதையை எந்தவொரு ஆங்கில அல்லது சிங்களப் பத்தரிகைகளும் வெளியிடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. றோஹன விஜேவீர பொரள்ளை- கனத்தையில் மிகவும் அநாகரிகமாக சவக்குழியில் வீசி எறிந்து புதைக்ப்பட்ட கதைகளையும் நாம் அப்போது சொல்லி இருந்தாலும். ஆனால் இதுவரை அவர் எப்படி கைது செய்யப்பட்டார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? அது எப்போது? எப்படி நடந்தது என்பது தொடர்பில் துல்லியமான தகவல்கள் எவருக்கமே தெரிந்திருக்கவில்லை. இப்போது அது பற்றிய பல தகவல்கள் கண் கண்ட சாட்சிகள் ஊடாக நமக்குக் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அரசியல் களத்தில் அவர் உருவாக்கிய மக்கள் விடுதலை முன்னணி -JVP என்ற இயக்கம் உச்ச செல்வாக்கில் இருக்கின்ற இந்த நாட்களில் இது பற்றி பேசுவது மிகவும் பொறுத்தமாக இருக்கும் என்று நாம் கருதுகின்றோம். நாம் இங்கு சொல்கின்ற தகவல்களுக்கு முன்னர் இது பற்றிய உண்மைக்குப் புறம்பான கதைகளும், அவரை அவர் கட்டிக் கொடுத்தார் இவர் காட்டிக் கொடுத்தார் என்று ஊகங்கள்தான் நாட்டில் நிலவி வந்தது. இப்போது அந்த தகவலை நேரில்  பார்த்து அதில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரே இந்தத் தகவல்களை இப்போது அம்பலப்படுத்தி இருக்கின்றார்.

JVP didn't treat our family well | Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition

இராணுவத்தில் ஐந்தாவது படை பிரிவில் ஆனந்த ஜயசுந்தர 32 வருடங்கள்  பணியாற்றி தனது திறமைகளுக்காக அதில் பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார். எல்ரிரிக்கு எதிராக வெளிஓயாவில் போர் வெற்றியைப் பெற்றுத் தந்த ஜனக்க பெரோவின் கீழ் நான் அதில் பொரியியல் பிரிவில் பணியாற்றி வந்தேன். போர் செயல்பாடுகள் காரணமாக எனக்கு உயர் விருதுகள் கூட கிடைத்திருக்கின்றன என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இப்போது விஜேவீர கைது  பற்றி அவர் சொல்லும் நேரடித் தகவல்களைப் பார்ர்போம். அன்று ஜேவிபி. செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்ற செயல்பாடுகளில் நாம் ஈடுபடுத்தப்பட்டிருந்தோம். அந்த நாட்களில் எமது மேல் அதிகாரியாக மேஜர் ஜனக பெரேரா இருந்தார். அப்போது நாம் கொழும்பு பிரதேசத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். அந்த சமயம் திம்பிரிகஸ்யாயவிலுள்ள வாகனங்கள் திருத்தும் (காராஜ்) ஒன்றில் திருத்துக்காக கார் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த வண்டி அப்போது கொழும்பு பிரதேச ஜேவிபி பொறுப்பாளர் டீ.ஏ. ஆனந்த என்பவர் பாவிக்கின்ற கார் என்று தெரியவந்தது. அவரைக் கைது செய்து விசாரித்த போது ஜேவிபி. இரண்டாம் மட்டத் தலைவர் உபதிஸ்ஸ கமநாயக்க கலந்துரையாடல் ஒன்றுக்காக பேராதனை வருகின்றார் என்று எமது அதிகாரி ஜனக்க பெரேராவுக்கு கைது செய்யப்பட்டவர் தகவல் கிடைத்தது.

இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக எமது அதிகாரி ஜனக பெரேரா தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டி இருந்தது. அப்போது அவரது அதிகாரி ஜெனரல் வைத்திய ரத்தன. ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்ததால் பதில் கடமையாற்றிய பிரிகேடியர் அல்கமவை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் கொடுத்த பதில் ஜனக பெரேராவுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் கொடுத்தது. கமநாயக்காவைக் கைது செய்வதால் உனக்கோ எனக்கோ என்னதான் கிடைக்கப் போகின்றது.! வேறு வேலையைப் பார் என்று கூறி இருக்கின்றார்.

அதனால் எமது அதிகாரி ஜனக பெரேரா அல்கமவுக்குத் தெரியாது இந்த முயற்சியல் இறங்குவது என்று தீர்மானித்தார். எனக்கும் இன்னும் சிலருக்கும் பயணத்துக்குத் தயாராகுமாறு அவர் எங்களைக் கேட்டுக் கொண்டார். அப்போது நாம் இருந்த கந்தானை முகாமுக்கச் சென்று தயாரனோம். ஏற்கெனவே நாம் கைது செய்த கொழும்புத் தலைவர் டீ.ஏ.ஆனந்தவையும் ஏற்றிக் கொண்டு மூன்று வாகனத்தில் கண்டி நோக்கி பயணித்தோம்.

பேராதனை கலஹ சந்திக்கு நாம் செல்லும் போது மூன்று மணி வரை இருக்கும். ஜேவிபி இரண்டாம் மட்டத் தலைவர் உபதிஸ்ஸ கமநாயக்க பிராந்தியத் தலைவர் பியதாச ரணசிங்ஹ வீட்டுக்கு வருவதாகத்தான் நமக்கு கொழும்புத் தலைவர் ஆனந்த சொல்லி இருந்தார். ஆனால் அப்படிச் சொன்னவர் நாம் பேராதனை போனதும் அவர் ஏம்மை ஏமாற்றத் துவங்கினார். போலியான இடங்களையும் வீடுகளையும்  காட்டி எம்மை அழைக்களித்தார்.

நாம் இப்படி அங்கும் இங்கும் அழைந்து கொண்டிருந்ததைப் பார்த்த தெருவில் சென்று கொண்டிருந்த ஒருவர் எங்களை நாடி என்ன தேடுகின்றீர்கள் என்று கேட்டார். நாம் அவருக்குப் பேச்சுக் கொடுத்த  போது  எனக்கு அந்த ஜேவிபி தலைவர் பியதாச ரணசிங்ஹ வீடு தெரியும். ஆனால் காட்டிக் கொடுப்பதால் எனக்கு ஏதும் நெருக்கடிகள் வரலாம் என்று மனிதன் அச்சப்பட்டார்.

Janaka Perera - Alchetron, The Free Social Encyclopedia

அவருக்குத் தைரியம் ஊட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். அவர் வீடு இருக்கும் இடத்தை எமக்கு காட்டினார். எங்களைப் பார்த்ததும் ஒருவர் நொண்டிக் கொண்டு வந்தார். தோட்டத்தில் இன்னும் பல தமிழர்கள் பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். வீட்டு விராந்தையில் மூன்று நான்கு பேர் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டை தேடிய போது அரசுக்கு எதிரான ஜேவிபி ஓடியோ நாடாக்கள் பல கிடைத்தன. எழுபத்து ஐயாயிரம் (75000) ரூபாய்வரை இருந்தது. அதனை அங்கிருந்த ஒரு பெண்ணின் கையில் எமது அதிகாரி கொடுத்தார்.

அங்கு  நுவரெலியத் தலைவர் பியதிஸ்ஸ  பதுள்ளைத் தலைவர் எஸ்.பி. ஹேரத் இருந்ததுடன் அவர்குடைய கார்களும் அந்த வீட்டில் இருந்தது. எல்லோரையும் பிடித்துக் கொண்டு வரும் போது வீதியில் போய்க். கொண்டிருந்த பல ஜேவிபி. காரர்களையும் எம்முடன் இருந்தவர்கள் காட்டித் தந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவர்களையும் பிடித்துக் கொண்டுவர எமக்கு வண்டியில் இடமிருக்கவில்லை. அதனால் பலரை கண்டு கொள்ளாமல் வந்து விட்டோம். இவர்களை அதட்டி விசாரித்த போது பியத்திஸ்ஸ எங்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் தலைவர் இருக்கும் இடத்தை காட்டித் தருகின்றோம் சொன்னர்.

Life with a revolutionary leader | Daily FT

எல்லோரையும் எடுத்துக் கொண்டு அவர்கள்  கார்களையும் எடுத்துக் கொண்டு நாம் நுவரெலியாவில் இருந்து உலப்பனை விஜேவீர வீட்டுக்கு வந்தோம். அப்போது  கருக்கல் நேரம். அன்று திகதி  1989.07.10 திகதி. அங்கு சென்றதும் எமது அதிகாரி ஜனக பெரேரா வழக்கம் போல் நீங்கள் பேசுகின்ற படி பேசுங்கள் என்றார். பியதிஸ்ஸ வித்தியாசமான முறையில் மூன்று முறை கதவைத் தட்டினார்.

அப்போது உள்ள இருந்த ஒருவர் ஓட்டைகள் விழுந்த பீய்தல் பனியனும் பிஜாம சாரமும் போட்டிருந்தார். அவர் ஜன்னலைத் திறந்து பார்த்து விட்டு ககதவைத் திறந்தார். அதுவரையும் நாம் மறைவாக இருந்தோம். அப்போது தூப்பாக்கியை ஜனக பெரேரே அந்த மனிதனின் தலையில் வைத்தார். அப்போது அவர் நான் விஜேவீர அல்ல என்று  கூறினார் அந்த மனிதன்.

அந்த நேரம் எமது அதிகாரி நான் உம்மை விஜேவீர என்று சொன்னேனா என்று அவரிடம் திருப்பிக் கேட்டார். அதற்கு அவர் இல்லை.. இல்லை… என்னை இங்கு சிலர் விஜேவீர என்று சந்தேகிககின்றர்கள் என்று இதோ எனது அடையாள அட்டை என்று ஒரு தேசிய அடயால அட்டையை ஒன்றை நீட்டினார் அதில் கித்சிரி அத்தநாயக்க என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

the charming little train station at Ulapane is located between "Gampola" and "Nawalapitiya". this location truly complemen… | Small towns, Train station, Landscape

எங்களுடன் போகத் தயாராகுமாறு அவரைக் கேட்ட போது குழந்தைகள் கதறத் துவங்கினார்கள். நாங்கள் பாடசாலைக்குப் போக மாட்டோம் என்று அடம் பிடித்தார்கள். இல்லை அப்படி செய்ய வேண்டம். பாடசாலைக்குப் போங்கள் நன்றாகப் படிங்கள் என்று பிள்ளைகளுக்கு விஜேவீர சொன்னர். அவர் மனைவி அமைதியாக இருந்தார். அவரிடம் விஜேவீர நான் வரலாம் வராமலும் போகலாம். பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

வண்டியில் ஏறும் போது நான்; மகனை எனது வழியில் போக வழி செய்யுங்கள் என்று அவர் சொல்லி விட்டு ஏறினார். அப்போது  என்னுடன் இருந்த உளவுத்துறை அதிகாரி ஜயநெத்தியிடம் இது விஜேவீர இல்லையே என்று நான் கூற, உனக்கு என்ன தெரியும்? அவர் தன்னை ஆள் மாறட்டம் செய்து கொண்டிருக்கின்றாh. இவர் தான் விஜேவீர பொறுத்திருந்து பார் என்று எனக்கு ஏசினார்.

Ranasinghe Premadasa's remarkable political rise | Daily FT

இப்போது நாங்கள் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்தோம் வரும் வழியில் உண்பதற்காக கேகல்லையில் வைத்து விஜேவீரவுக்கு என்ன வேண்டும் என்று ஜனக பெரேரா கேட்டார். தனக்கு எதுவுமே தேவையில்லை என்று அப்போது விஜேவீர சொன்னாலும் அவருக்காகவும் கொத்து ரொட்டி உணவுக்காக வாங்கப்பட்டது. நேரம் இரவு எட்டு மணி அளவில்   கடந்து போய் இருக்க வேண்டும். எமக்கு முன்னால் விஜேவீரவை ஏற்றிக் கொண்டு போன வாகானம் கலிகமுவ பள்ளத்த்தில் இறங்கிய பின்னர் திடீரென்று நிறத்தப்பட்டது.

Aftermath Of Mr. Ranjan Wijeratne's Assassination – The Island

நாங்கள் வண்டியில் இருந்து அந்த வாகனத்துக்கு அருகில் சென்று பார்த்தோம். ஜனக பெரேரா சேர் கோபத்தில் இருப்பது எமக்குப் புரிந்தது என்ன என்று கேட்டோம். இவருக்கு எங்களுடன் எதுவுமே பேச முடியாதாம். பதலளிக்கவும் முடியாதாம். அந்தப் பேச்சில் ஆகப் பேவது ஏதுமில்லையாம். அவரை ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாசா முன்னிலையில் கொண்டு போகும் படி இந்த ஆள் கேட்க்கின்றான் என்று அவர் சத்தமாக எங்களுக்கு கூறினார். சற்று நேரத்தின் பின்னர் வண்டி மீண்டும் நகர்ந்தது. நாங்கள் கொழும்பு வரும் போது அதிகாலை மூன்று மணியளவில் இருக்கும். சுதந்திர சதுக்கத்தில் வைத்தத்தான் நாங்கள் இரவு சாப்பாட்டை உண்டோம். அன்று பகல் சாப்பாட்டைக் கூட சரியாக உண்ண முடியவில்லை.

அதன் பின்னர்  பௌத்த லோக மாவத்தையில் அமைந்துள்ள அப்போதய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்ன வீட்டுக்கு விரைவாக ஜனக பெரேரா போனார். விஜேவீரவை பிடித்து வந்திருப்பதாக அவருக்குத் தெரிவிக்ப்பட்டது. அங்கு வந்த அமைச்சர் ரஞ்சன் விஜேவீரவுக்கு கடுமையாகத் திட்டினார். அதன் பின்னர் விஜேவீரவை அங்கு வைத்துவட்டு நாங்கள் வெளியேறிவிட்டோம். பின்னர் நான் எனது முகாமுக்கு வந்து விட்டேன். அங்கு வந்து எனது சகாக்களிடம் விஜேவீரவை பிடித்துக் கொண்டு வந்த கதையை கூறிய போது அவர்கள் என்னை கிண்டலத்தார்கள். விஜேவீரவின் வாலையாவது உங்களுக்குப் பிடிக்க முடியுமா என்று அவர்கள் என்னை கேட்டார்கள்.

The Case For (And Against) Anura Kumara Dissanayake - Colombo Telegraph

விடிந்ததும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு நான் தூக்கத்துக்குச் சென்று விட்டேன். அடுத்த நாள் மீண்டும் ஜனக பெரேராவுடன் நாங்கள் ரஞ்ஜன் விஜேரத்ன வீட்டுக்கு வந்தோம். அப்போதும் விஜேவீர அங்கு இருந்தார். அதன் பின்னர் ஒரு சவப் பெட்டியை  எடுத்து வந்தார்கள். பதுள்ளை தலைவர் எஸ்.பீ. ஹேரத்துடன் நடந்த துப்பாக்கி சண்டையில் விஜேவீர சுடப்பட்டு இறந்து போனதாக ஒரு செய்தி தயாரிக்கப்பட்டது. இதனை ரஞ்சன் விஜேரத்ன உட்பட நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்து பார்த்தோம். அதனை விஜேவீரவும் கூடவே எங்களுடன் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி இரு நாட்கள் விஜேவீர அவர் அங்கிருந்தார்.

நாங்கள் மீண்டும் அங்கு சென்ற போது அவர் அங்கு  இருக்கவில்லை. அவரை அங்கு காணவில்லை. பின்னர் எங்களுக்குக் தெரிய வந்தது ரஞ்சன் விஜேரத்னதான் விஜேவீராவை துப்பாக்கியல் சுட்டிருக்கின்றார் என்று. இது 13.11.2024 திகதி நடந்தது. அவரது பிறப்பு 1943.07.14.  அதன் பின்னர் தான் பெரல்ளை கணத்தைக்கு எடுத்துச் சென்று சடலத்தை கூட அநாகரிகமாக குழியில் எறிந்து புதைத்திருக்கின்றார்கள். இது பற்றியும் நாம் விரிவாக முன்பு ஒருமுறை தகவல்களைச் சொல்லி இருக்கின்றோம். இராணுவத்துக்கும் ஜேவிபிக்கும் முரண்பாடுகள் கிடையாது. ஆனால் இராணுத்தினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீது திட்டமிட்டடு தாக்குதல்களை நடாத்தி இருதரப்பினர் மத்தியில் பகைமை ஏற்படுத்தப்பட்டது.

இந்த கைது காரணமாக தனது சக அதிகாரிகளைக் கூட ஜனக பெரேரா பகைத்தக் கொள்ள வேண்டியும்  வந்தது என்றும் குறிப்பிடுகின்றார் ஜனக பெரேராவுடன் விஜேவீரவை பிடிக்கச் சென்ற சென்ற இராணுவ அதிகாரி ஆனந்த ஜயசுந்தர. இந்த ஜனக பெரோவும் பின்பு அனுராதபுரத்தில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜேவீரவைக் கைது செய்யும் முன்னர் நாம் பிடித்திருந்த செய்த நுவரெலியத் தலைவர் பியதாச ரணசிங்ஹ பதுள்ளைத் தலைவர் எஸ்.பி. ஹேரத் மற்றும் ஏற்கெனவே நாம் கைது செய்திருந்த சில ஆசிரியர்கள் கொழும்பு சட்டக்கல்லூரி முகாமில் வைக்கப்பட்டடிருந்தனர். விஜேவீர கொல்லப்பட்டதற்கு பின்னர் கூட நாம் அவர்களை அங்கு பல முறை பார்த்தோம்.

Upatissa Gamanayake - Wikipedia

ஆனால் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்வை. விஜேவீரவுக்கு நடந்த கதைதான் அதன் இரண்டாம் நிலைத் தலைவர் உபதிஸ்ஸ கமநாயக்கவுக்கும் நடந்தது. ஜே.வி.பி.யின் தற்போதய  தலைவர் அணுரகுமார திசாநாயக்கவுக்கு இதே விதமான ஒரு ஆபத்து சம காலத்தில் இருப்பதாக தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

sri lanka guardian news.

Previous Story

முஸ்லிம் MP க்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

Next Story

ஜூலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு!