வாராந்த அரசியல் !12.01.2024

-நஜீப்-

நன்றி: 12.01.2025 ஞாயிறு தினக்குரல்

1

அனுர லசந்தவுக்கு நீதி தருவாரா!

லசந்த படுகொலை நடந்து பதினாறு வருடங்கள். ஆனாலும் இது தொடர்பான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெற்று அதற்கு நியாயம் கிடைக்கவிலை. மாறாக  படுகொலையுடன் தொடர்புடைய ஆவனங்கள் மட்டுமல்ல அதனுடன் தொடர்புற்ற பலரும் மர்மமான முறையில் மரணித்து வருகின்றார்கள்.

அது பற்றிய ஒரு குறிப்புத்தான் இது. 2006.01.08 காலை 10.20 அளவில் கொலை நடக்கின்றது. லசந்த துப்பாக்கியால் சுடப்பட்டார் என்று  செய்தி சொல்லப்பட்டது. ஆனால் துப்பாக்கியால் அவர் சுடப்படவில்லை. இதனைப் புலிகளின் வரவில் வைக்க முயற்சிகள் நடந்தன. நுவரெலிய-யேசுதாசன் என்பவர் இது தொடர்பாக விசாரிக்கப்பட அவர் பெயரில் ஐந்து சிம் கார்டுகள் பற்றிய தகவல்கள் தெரிய வருகின்றது.

அவற்றின் பாவனையை ஆராய்ந்தால்  மருதானை-திரிபோலி இராணுவ முகாமை அது காட்டுகின்றது. சிறையில் இருக்கும் போது யோசுதாசன் மர்மமான முறையில் இறக்கின்றார்.

அனுராபுரத்தில்  இரு கொலைகள். அந்த சிம்காட்டை உபயோகித்த திரிபோலி இரணுவ முகாமைச் சேர்ந்த கந்தேவத்த என்பரும் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்படுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் கதைகளும் அப்படித்தான் போகின்றன. இது பாவித்துவிட்டு சாட்சிகளை அழித்து உண்மையான குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் வியூகம் தான்.

2

கோட்டாவைத் தெரியாது-யோசித!

Yoshitha to take legal action against MP Anura - Ceylon Today

சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  மகன் யோசித்த கதிர்காம-மாணிக்க கங்கை அருகில் கட்டப்பட்ட ஒரு  மாளிகை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக சிஐடி. க்கு அழைக்கப்பட்டிருந்தார். இரண்டு மணி நேரங்கள் விசாரணை நடந்தது. அந்த மாளிகையில் கடற்படை பிரிவு ஒன்றும் தங்க வைக்கப்பட்டடிருந்தது.

யோசித்த ஒரு கடற்படை அதிகாரியாகவும் கடமை பார்த்திருக்கின்றார். அவர் அந்த பதவிக்கு வந்தது தொடர்ப்பிலும் சர்ச்சைகள் இருக்கின்றன.  வீடு பற்றி விளக்கம் கேட்ட போது பெரும்பாலானவற்றுக்கு தனக்கு ஞாபகம் இல்லை தெரியாது என்ற பதில்களைத்தான் யோசித்த கொடுத்திருக்கின்றார். இவை எல்லாவற்றையும் விட இவர் ஒரு இடத்தில் கோட்டாபே ராஜபக்ஸ என்று ஒருவர் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது.

அப்படி ஒருவர் தனது தந்தை ஜனாதிபதியாக இருந்த போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தது பற்றியும் தான் ஏதும் அறிந்திருக்கவில்லை  என்று சொல்லி இருக்கின்றார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த மாளிகை அரச வனப் பரிபாலனத்துக்குச் சொந்தமானது. அதில் எவருக்கும் வீடு கட்ட முடியாது. அப்படி இருக்க எப்படி அங்கு முளைத்தது இந்த மாளிகை.

3

தமிழரசுக்குள் கோடாரிக் காம்பு!

No photo description available.

தமிழரசு பின்னடைவுகளுக்கு சம்பந்தன் மாவை சுமந்திரன்தான் காரணம் என்று நாம் முன்பு சொல்லி இருந்தோம். ஆனால் எப்படியோ நீரில் மிதக்கின்ற ரப்பர் பந்து போல அவர்களின் கொட்டம் கட்சிக்குள் தொடர்கின்றது. மூத்த தலைவர்கள் என்ற கௌரவம் காரணமாக சம்பந்தனையும் இன்று மாவையையும் கட்சி மதிக்கின்றது.

ஆனால் இது எந்தளவுக்கு ஆரோக்கியம் என்று நமக்குத் தெரியாது. இதனால்தான் பெரியவர்கள் தயவில் தமிழரசுக் கட்சியில் அன்றும் இன்றும் சட்ட புலமையை முன்னிருத்தி சுமந்திரன் ஆதிக்கம் நீடிக்கின்றது. மக்கள் அவரை தூக்கி வீசினாலும், மனிதன் விட்டதாக இல்லை.

ஒரு சமயம் கறுப்புச் சட்டைக்காரர்கள்தான் தமிழர் தரப்பில் நாடளுமன்றில் இருக்க வேண்டும் என்று வாதிட்டார். ஓரம்போன சுமந்திரன்   இன்று மீண்டும் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தத் தலைப்படுகின்றார்.

தமிழரசு யாப்பும் ஐதேக.-ரணில் மற்றும் மு.கா.-ஹக்கீம் போன்றவர்கள் வைத்திருக்கின்ற அரசியல் யாப்புப்போல தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளது தனி நபர்கள் நலன்களை முன்னிருத்திப் பயணிக்கின்றது. இதனால் தமிழரசுக்குள் இப்போது சுமந்திரன் ஒரு கோடாரி காம்பு என்ற விமர்சனங்கள்.

4

ஐயோ ஆளை விடுங்க-ரஹ்மான்!

Colombo Municipal Council

ஜனாதிபதி ரணில் பதவியில் இருந்த போது நடக்க வேண்டிய உள்ளூராட்சித் தேர்தல்கள் நடக்கவில்லை. அதற்கு நிதி மற்றும் அச்சக தலைவர்களை வைத்து ரணில் ஆப்பு வைத்து விட்டார். ஆனால் இன்று உள்ளாட்சித் தேர்தல்களை கட்டாயம் நடாத்தி ஆகவேண்டும் என்று நீதி மன்றம் கட்டளை போட்டிருக்கின்றது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்று கட்சி மாறிவிட்டார்கள். பல நூறுபேர் வெளிநாடுகளுக்குப் போய் இருக்கின்றார்கள். ஐம்பது வரையிலானவர்கள் மரணித்து விட்டார்கள். டசன் கணக்கானவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து விட்டார்கள்.

இதனால் இப்போது புதிய வேட்பு மனுக்களைக்கோரி தேர்தல் நடக்க இருக்கின்றது. கடந்த முறையைப் போல இந்த முறையும் நீங்கள் கொழும்பு மா நகர மேயர் பதவிக்கு எம்.பி. பதவியை இராஜினாமச் செய்துவிட்டு களத்துக்கு வருவீர்களா என்று முஜீபர் ரஹ்மான் எம்பியைக் கோட்டால் ஐயோ. அது அப்போதய அரசியல் நிலை.

இன்று அப்படி தான் போட்டிக்கு வரும் நிலையில் இல்லை. ஆளை விடுங்கள். கட்சி சார்பில் வேறு ஆட்கள் வருவார்கள் என்று தனது நிலைப்பாட்டை உறுதி செய்தார் ரஹ்மான்.

5

ஹீரோவாகும் சாமர சம்பத்!

Chamara Sampath steps down as Uva Province Education Minister

கடந்த நடாளுமன்றத்தில் இருந்த அரசியல் விற்பன்னர்கள் பலர் நாடாளுமன்றத்தில் இருந்து மக்களால் தூக்கி எறியப்பட்டிருக்கின்றார்கள். இதில் சட்ட மேதைகள், பேராசிரியர்கள். வைத்தியர்கள்  நடிகர்கள் என்று பலரும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் கட்சித் தலைவர்கள் அமைச்சர்கள் என்று சீனியர்களும் இருக்கின்றார்கள்.

இதில் பதுள்ளை மாவட்டத்தில் அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் என்று இருந்த நிமல் சிரிபால டி சில்வா ஹரின் போன்றவர்கள் படுதோல்வியைத் தழுவுகின்ற போது ஒரு வடை வியாபாரியாகவும் பாமரனாகவும் அரசியலுக்கு வந்த சாமர சம்பத் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று திரும்பவும் நாடாளுமன்றத்துக்கு வந்தது பதுளை மக்கள் மத்தியில் இவர் மீது இருக்கும் நல்லெண்ணத்தைக் காட்டுகின்றது.

அத்துடன் அவர் ஒரு படித்து பட்டம் பெற்றவராக இல்லாது போனாலும் வலுவான ஆளும் தரப்புக்கு அவர் கொடுக்கின்ற அதிரடிகளை நாமும் பாராட்ட வேண்டும் போல் இருக்கின்றது. அதே நேரம் நமது நாடாளுமன்றத்தில் பார்வையிழந்தவர்கள் சார்பில்  ஒருவர்.

அது போன்று மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் ஒரு பிரதிநிதியையும் இந்த முறை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றார்களே என்றும் நமக்கு ஒரு சந்தேகம் வருகின்றது.!

Previous Story

SJB யில் இருந்து விலகும் எரான் விக்ரமரத்ன

Next Story

பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி!