வர்த்தமானி மூலம் பைசர் முஸ்தபா  நாடாளுமன்ற உறுப்பினர்

2024 பொதுத் தேர்தலில் எரிவாயு கொள்கலன் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் பைசர் முஸ்தபா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியால், நேற்று (10) செவ்வாய்க்கிழமை முஸ்தபா தொடர்பான தெரிவு, ஆணையகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபாவை நியமித்தமை தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணிக்குள் சர்ச்சை எழுந்துள்ளது.

இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள்

2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க சார்பு புதிய ஜனநாயக கட்சிக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்தன.

வர்த்தமானியின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்ட பைசர் முஸ்தபா | Faiser Mustafa Gazetted As Member Of Parliament

இதில் ஏற்கனவே ஒரு ஆசனம், சர்ச்சைகளுக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நிரப்பப்பட்டுள்ளது.

Previous Story

2023 உள்ளூராட்சி மன்ற தேர்தல் மனுக்கள் இரத்து !

Next Story

சிரியாவில்  இஸ்ரேலிய தாக்குதல்!