வருகிறது இனவாதக் கூட்டணி!

நஜீப்

தற்போது ராஜபக்ஸாக்கள் தங்களது கடும் போக்கு இனவாதத்திலிருந்து விடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் அதனால் ஏற்படுகின்ற இடைவெளிக்கு கடும் போக்கு இனவாதக் கொடியைத் தூக்கிப் பிடித்து, தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள விமல் அணி முயற்சிகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

வடக்குக் கிழக்கில் உள்ள காணிகளை அரசு வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று அந்த அணி அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. வடக்கு கிழக்கு பௌத்த மயமாக்களின் பின்னணியில் இவர்கள் கை இருக்கின்றதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

அந்த வகையில் கம்மன் பில, அதுருலியே மற்றும்  சரத் விஜேசேக்கர என்போர் ஒரு அரசியல் கூட்டணியில் இணைந்து வருகின்ற தேர்தலில் கடும் போக்கு இனவாதக் கூட்டணி ஒன்றை உருவாக்க அதிக வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

நன்றி: 07.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கிழக்கு  ஆளுநர் முஸ்லிம் விரோதப் போக்கு பகிரங்க குற்றச்சாட்டு-இம்ரான்MP.

Next Story

இம்ரான் கைது "சட்டவிரோதம்" -  உச்ச நீதிமன்றம்