வரி உயரும் வேறு வழியில்லை – அலி சப்ரி

நாட்டில் தற்போது பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளதால் அதனை சமாளிக்க விற்பனை வரியை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

கடந்த 2019 ஆம் ஆண்டு வரி விகிதத்தை அரசாங்கம் 8 சதவீதமாக குறைத்தது மிகப்பெரிய தவறு என தெரிவித்தார். மேலும் அடுத்த எட்டு மாதங்களில் தினசரி அத்தியாவசிய பொருள் ஏற்றுமதிக்கான தேவை 4 பில்லியன் டொலராக உள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தான் தற்போது அத்தியாவசிய விற்பனை பொருட்களின் வரியை உயர்த்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கடுமையான சூழலில் இருக்கும் இலங்கையின் தற்போதைய வரி விகிதமானது நிலையின் அல்ல என்றும், வரி விகிதத்தை 13 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Previous Story

100 மில்லியன் இழப்பீடு கோரும் KOTA  GO HOME கோஷத்தின் முன்னோடி

Next Story

மைத்திரிபால தகவலுடன் முரண்படும் எம்.பிக்கள்