வன்முறை: கைதாகவுள்ள புள்ளிகள் இதோ!

இலங்கையில் அரசாஙகத்திற்கு எதிராக காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து சட்டமா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள்:

  • ஜோன்ஸ்டன்பெர்னாண்டோ
  • சனத்நிஷாந்த
  • சஞ்சீவஎதிரிமான்ன
  • மிலான்ஜயதிலக்க
  • தேசபந்துதென்னகோன், பிரதிப்பொலிஸ்மாஅதிபர்)
  • டான்பிரியசாத்
  • மஹிந்தகஹந்தகம
  • நாலகவிஜேசிங்க
  • பந்துலஜெயமான்ன
  • தினேத்கீதக
  • சமன்லால்பெர்னாண்டோ
  • அராபிவசந்த
  • சுபாஷ் (தெஹிவளைநகரசபை)
  • அமல்சில்வா
  • சமீரசதுரங்கஆரியரத்ன
  • ருவன்வெல்லேரமணி
  • துசிதரணபாகு
  • சஜித்சாரங்க
  • புஷ்பலால்குமாரசிங்க
  • நிஷாந்தமெண்டிஸ்
  • புஷ்பகுமார (முன்னாள்இராணுவசிப்பாய்)
  • சவின்பெர்னாண்டோ (வென்னப்புவ)

ஏற்கனவே பயணத்தடை பெற்றவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

Previous Story

4 எம்.பிக்கள், போலீஸ் உயர் அதிகாரி உட்பட 22 பேரை கைது செய்ய உத்தரவு

Next Story

லசந்த கொலை: தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி  சாட்சியம்!