–நஜீப்-
வடிவேலு சுரேஸ் நமது பார்வையில் ஆளுமை மிக்க ஒரு மலையக தலைவன். தான் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தை திடீரென சஜித் பிரேமதாச இரத்துச் செய்ததனால் தான் சார்ந்த சமூக மக்கள் மத்தியில் மிகவும் சுரேஸ் அவமானத்துக்கு ஆளானார்.
இதனால் சஜித்துடன் அவருக்கு முறுகலும் ஏற்பட்டது. தன்னால் விடப்பட்ட தவறுக்கு பசறைக்கு நேரடியாக வந்து அந்த மக்களிடத்தில் மன்னிப்புக் கோருவதாகவும் சஜித் வடிவுக்கு வாக்குறுதி வழங்கி இருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையில் சம நேரத்தில் அவர் ஜனாதிபதியையும் எதிர்க் கட்சித் தலைவரையும் சந்தித்திருந்தார். இது பற்றி அவரிடம் கேட்ட போது நான் யாருக்கும் கடனுமில்லை பயமும் இல்லை என்று பதில் வழங்கி இருந்தார்.
ஒரு சிறுபான்மைத் தலைவர் என்ற வகையில் அவர், தான் சார்ந்த மக்களின் தேவைகளுக்காக ஆளும் எதிரணித் தலைவருகளுடன் உறவில் இருப்பதை பிழை என்று சொல்ல முடியாது. ஆனால் வடிவு-ரணில் உறவில் இன்று சஜித்துக்கு ஒரு சின்னக் களக்கம்.
நன்றி: 07.05.2023 ஞாயிறு தினக்குரல்