-நஜீப்-
நன்றி 24.08.2025 ஞாயிறு தினக்குரல்
இஸ்ரேல் பிரதமர் நெத்தென்யாவுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு லோஹான் ரத்வத்தை ஒன்றும் பெரிய ஆள்கிடையாது. ஆனாலும் அவரது செயல்பாடுகளை நோக்கும் போது நமது வாதங்கள் எந்தளவுக்கு யதார்த்தமானது என்பதனை பிரதேச மக்கள்தான் சொல்ல வேண்டும்.
காசாவில் அப்பாவி மக்களை எப்படி எல்லாம் நெத்தென்யா கொன்று குவிக்கின்றார் என்பதனை நாம் ஊடகங்களில் பார்க்கின்றோம். ஆனால் இந்த லொஹான் அடாவடித்தனங்களை நாட்டு மக்கள் நேரிலே பார்த்திருந்தார்கள். அவர் மரணித்த போது விமர்சனங்களில் இது வெளிப்பட்டது.
தேர்தல் காலங்களில் கண்டியில் குறிப்பாக அவரது தொகுதியான பாததும்பறையில் இது உச்சம் தொட்டிருந்தது. உடதலவின்ன, மடவள, பன்வில் போன்ற முஸ்லிம் தமிழ் பிரதேசங்களில் நடந்த அட்டகாசங்களில் கொல்லப்பட்ட காயமாக்கப்பட்ட மனித ஓலங்களை இங்கு பார்க்க முடிந்தது.
நாமும் அவ்வப்போது நேரில் பார்த்திருக்கின்றோம் என்பதால்தான் இந்தப் பதிவு. அதே நேரம் இவர்களினால் பிழைத்த ஒரு கூட்டமும் நன்றியுடன் இருப்பதையும் சொல்ல வேண்டும்.