நஜீப்
நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல்
சனத் பாலசூரிய: ‘WHO IS LASANTHA’ யாரிந்த லசந்த நூல் ஆசிரியர். தற்போது ஜேர்மனியில் வசிக்கின்றார். முன்னாள் தொழில் ரீதியலான ஊடகவியலாளர் சங்கத் தலைவர். இந்த புத்தகம் லசந்த கொலையாளிகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. பாலசூரிய அதில் அதிரடியான கருத்துக்களைப் பதிந்திருக்கின்றார்.
கல்கிஸ்ஸ பொலிஸ் உளவுப்பிரிவு ஒரு காலத்தில் நமக்கும் தொல்லை கொடுத்தது போல (நாம் இதனை முன்பும் சொல்லி இருந்தோம்-முறைப்பாடுகளும் கொடுத்திருந்தோம்.) அதே பொலிஸால் பலசூரியாவுக்கும் தொல்லைகள்.
ஒரு சந்தர்ப்பத்தில் தன்னையும் பொத்தல ஜயந்தவையும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா கூட்டி வருமாறு பந்துல பத்மகுமாரவிடம் கேட்க, நாம் இருவரும் பாதுகாப்புக்கருதி இரு திரிவில்களில் போய் இடையில் பந்துல காரில் ஏற்றப்பட்டோம்.
அப்போது உங்கள் இருவருக்கும் பலத்த உயிராபத்து. அதனால் கோட்டா என்னதான் பேசினாலும் எதிர்த்துப் பேசிவிடாதீர்கள். இது பந்துல வேண்டுகேள். 17 வருடங்களுக்குப்பின் பலசூரிய தந்த தகவல் இது.





