ராஜபக்ஸாக்களின் மூத்த சகோதரர் சாமல் ராஜபக்ஸ ஒரு ஆபூர்வமான கொள்ளையை மேற்கொண்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாகம்புரவில் தனக்கு இல்லாத ஒரு வீட்டை காட்டி இவர் மில்லியன் (150) கணக்கில் பணம் கொள்ளையடித்திருக்கின்றார்.
கடந்த ஜனாதிபதி கோட்டா காலத்தில் நாட்டில் ஏற்ப்பட்ட அரகலயவின் போது தனது மேற்படி வீடு தீயிட்டு சேதம் விளைவிக்கப்பட்டதாக கூறி போலி ஆவனங்களைத் தயாரித்தே இந்த கொள்ளையை அவர் நடாத்தில் இருக்கின்றார்.
அப்படி ஒரு வீடே அந்த இடத்தில் இல்லை. இது தொடர்பாக அவர் கைதாகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. கௌரவமான மனிதர்களாக சமூகத்தில் தம்மைக் காட்டிக் கொண்ட இவர்கள் பொது மக்களின் பணத்தை எப்படி எல்லாம் கொள்ளையடித்திருக்கின்றார்கள் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம்.
அவரது மகன் சசிந்திரவும் உர இறக்குமதி தொடர்பாக இதே போன்று ஒரு மோசடியைச் செய்திருந்தது தொடர்பான விசாரணைகளும் நடந்து கொண்டிருப்பதும், அது மஹிந்தானந்த அலுத்கமையின் தலையில் போடுவதற்கும் இவர் முயல்வதும் தெரிந்ததே.
இதே ராஜபக்ஸாக்களுக்கு விசுவாசம் தெரிவிக்கின்ற ஒரு சிறு கூட்டமும் நாட்டில் இருந்து வருவதும் குறிப்பிடத் தக்கது. நிச்சயமாக இவர்கள் அவர்கள் வீசும் எச்சில்களை உண்டு நன்றி தெரிவிக்கின்ற கூட்டமாகத்தான் இருக்க வேண்டும்.





