ரஷ்ய-இந்திய நெருக்கம் சர்வதேச சமநிலையைப் பாதிக்குமா?

-யூசுப் என் யூனுஸ்-

‘நல்ல பொருளாதார வளமும்
சக்தி வாய்ந்த இராணுவமும்
ஒரு நாட்டுக்கு நல்ல பாதுகாப்பாக
பார்க்கப்பட்டாலும் சமகால போர்
தளபாடங்கள் தந்திரங்களின் படி
மூன்றாம் உலகப்போர் என்பது
கண்ணுக் கெட்டிய தூரத்தில்
இல்லவே இல்லை.
அதே போன்று இந்திய-பாகிஸ்தான்
ஈரான்-அமெரிக்க மற்றும் இஸ்ரேல்
என்பவற்றுக்கிடையிலும் முழு
அளவிலான போருக்கும்
வாய்ப்புக்கள் கிடையாது.
என்றாலும் மட்டுப்பட்ட மோதல்களுக்கும்
நெருக்கடிகளுக்கும் இடமிருக்கின்றது.’

 

தலைப்புக்கு வருவதற்கு முன்பு மனித இனத்தின் வரலாறு, தற்காலப் போர் அனுகுமுறைகள் பாதுகாப்பு யுக்திகள் என்பன பற்றி ஓரளவுக்கு பேசிவிட்டு கருவுக்குள் வர எண்ணுகின்றோம். எனவே வாசகர்கள் சற்று பொறுமை காத்து கட்டுரையை வாசிக்க வேண்டி இருக்கும், என்பதை ஒரு குறிப்பாக இங்கு பதிய விரும்புகின்றோம். மனிதப் பிறப்பு எப்போது ஆரம்பமானதோ அன்று முதல் அவனிடத்தில் கருத்து முரன்பாடுகளும் தோன்றி இருக்க வேண்டும். சமயக் கருத்துக்களின் படி ஆதம் ஏவால் அல்லது விஞ்ஞானக் கருத்துக்களின் படி பரிணாம வளர்ச்சியில்தான் மனிதப் பிறப்பு நடந்திருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதன் படி பார்த்தாலும் துவக்கத்திலே கருத்து முரன்பாடுகள் தோன்றி இருக்க வேண்டும். நாம் முன்பு சொன்ன ஆதம் ஏவால் இறைபடைப்பு என்று பார்த்தாலும் அவர்களிடையே ஒருமித்த கருத்து இருக்க வில்லை. எனவேதான் ஏவால் இறை கட்டளையை மதிக்கத் தவறியதால் அவர்கள் இருவரும் பூமிக்கு அனுப்பப்பட்டார்கள் என்றுதான் வரலாறுகள் கூறுகின்றன.

அதன் பின்பு விரிவடைந்த அவர்களது சந்ததியினருக்கு இடையேயும் இந்த முரன்பாடுகள் வலுப் பெற்றது. இதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. மதங்களுக்கிடையே மனிதப் பிறப்புப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்களின் குறிப்பாக கிருஷ்துவ, இஸ்லாமிய கருத்துக்கள் கணிசமாக இணைந்தே பயணிக்கின்றது. இதற்கு மத்திய கிழக்கில் இந்த இரு சமயங்களின் பிறப்பு துவங்கியது காரணமோ என்னவோ தெரியாது.

இப்போது தலைப்புக்கள் வருவோம் நாம் கூறும் நியதிப்படி தாய் தந்தை உடன் பிறப்புக்களுக்கிடையே முரன்பாடுகள் சர்வ சாதாரணமாக பார்க்கக் கூடியதாகவுள்ளது. சமூகம் பல்கிப் பெரிகி குடும்பம் சமூகமாக இனம் குலம் மொழி மண் மதம் நாடு-தேசம் என்றறெல்லாம் விரியும் போது அதிகாரப் போட்டி எல்லைப் பிரச்சினை என்றெல்லாம் வளர்ந்து விட்டது. சமய ரீதியான கருத்துப்படியோ விஞ்ஞான கணக்குப்படியோ பார்க்கின்ற போது ஒன்றிலிருந்துதான் இது துவங்கி இருக்கின்றது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பொது விதியாக இருக்கின்றது. ஆனால் பிற்காலத்தில் ஒன்று இரண்டாகி ஒன்று பத்தாகி பாத்து ஆயிரம் என்று இன்று மில்லியன் கணக்கில் உலகில் குடித் தொகை உயர்ந்து நிற்க்கின்றது. 2021 இது 770 கோடி என்று வளர்ந்திருக்கின்றது.

நாம் கடந்த வந்திருக்கின்ற இந்த வரலாற்றில் எத்தனையோ போர்களை உலகம் கண்டிருக்கின்றது. இந்திய வரலாற்றில் மகாபாரதப் போர். உலக வரலாற்றில் ஈருலகப் போர்கள். பிராந்திய ரீதியில் இன்னும் தீர்வு காணப்படாத எத்தனையோ பிரச்சினைகள். பினக்குகள் எப்போதும் அங்கு போர் அல்லது வன்முறை வெடிக்கலாம் என்ற நிலை. நாடுகளின் இராணுவப் பலம் போதாக்குறைக்கு நேச நாடுகள் அச்சு நாடுகள் என்றெல்லாம் கூட்டணிகள் துணைக்கு நின்றன. இன்றும் அப்படியான ஒரு நிலை உலக அரங்கில் இருந்து வருகின்றது. அமெரிக்கா-ரஷ்ய என்று ஒரு காலத்தில் இந்த முகாம்கள் வரிந்து கட்டிக் கொண்டு நின்னறன. ஒரு கட்டத்தில் கட்டத்தில் அமெரிக்க ஏக வல்லாதிக்கத்தைப் பெற்றிருந்தது. அது ரஷ்யப் பலயீனப் படுத்தப் பட்டிருந்த ஒரு காலம். இன்று புதின் வருகையுடன் நிலமை மீண்டும் அமெரிக்க ரஷ்யா என்பதற்கு அப்பால் சீன என்ற இரச்சகனும் தன்னை உலக அரங்கில் பொருளாதரா இராணுவ ரீதியில் வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

பிந்திய புள்ளி விபரங்களின் படி இன்று உலகில் மிகவும் பணப் பலம் உள்ள நாடு சீனா. இரண்டாம் நிலைக்கு அமெரிக்க தள்ளப்பட்டிருக்கின்றது. இதனால் சீனாவின் இராணுவமும் வலிமை அடைந்திருக்கின்றது. எனவே உலக அரங்கில் இன்று சீனாவை ஒரம் கட்டி விட்டு எந்தக் காரியங்களையும் முன் னெடுக்க முடியாது. எனவேதான் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பைடன் மீண்டும் அமாரிக்காவை முதன்மை இடத்துக்குக் கொண்டு வர தன்னாலான அனைத்துக் காரியங்களையும் செய்து கொண்டிருக்கின்றார். அவர் இந்தியாவை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ள முடியுமான அனைத்துக் காரியங்களையும் செய்து பார்க்கின்றார். ஆனால் இந்தியா இது விடயத்தில் மிகவும் நிதானமாக காய்களை நகர்த்தி ஓரேயடியாக அமெரிக்காவின் பக்கம் போய் விழுவதை அது தவிர்த்துக் கொண்டிருக்கின்றது. அந்தத் தேவை அதற்கு உடனடியாக இல்லையும் கூட.

தற்காலத்தில் போர் முறைகளும் முற்றிலும் மாற்றமடைந்திருக்கின்றன. போர் தந்திரமும் அதனை முன்னெடுக்கின் ஒழுங்குகளும் முற்றிலும் மாற்றம் அடைந்திருக்கின்றது. சராசரி மனிதர்களினால் இவற்றைக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத நிலை. போர் முனைக்கு வந்துதான் எதிரியைச் சந்திக்க வேண்டும் என்றில்லை. ஒரு மேசையில் அமர்ந்து கொண்டே காhரித்தை செய்து முடிக்கலாம் எதிரியை துவசம் செய்துவிடலாம் என்ற நிலை. இந்தப் பின்னணியில்தான் நாம் இன்று உலக நகர்வுகளையும் பார்க்க வேண்டி இருக்கின்றது. இது எந்தளவுக்கு மாறிப் போய் இருக்கின்றது என்றால் போர்கள் நடக்கமாலே எதிரி நாடுகளில் கொடிய வைரஸ்களைப் பரப்பி எதிரிகளைப் பலயீனப்படுத்தும் ஆயுதங்களும் முன்னணி நாடுகள் வைத்திருக்கின்றது. ஆனால் அவை இது பற்றி பகிரங்கமாக வெளியில் சொல்வதில்லை.

இங்கு நாம் ஒரு வலுவான கருத்தை சொல்லி வைக்கின்றோம். சம காலத்தில் மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வரப் போவதில்லை என்பதை நாம் அடித்துச் சொல்லுகின்றோம். பலமான நாடுகள் குறிப்பாக அமெரிக்க-ரஷ்யா மோதல் சீனா-அமெரிக்க போர். ஏன் இந்திய-பாகிஸ்தான் ஈரான்- அமெரிக்க மற்றும் இஸ்ரேல் என்ற முழு அளவிலான போர் என்பதற்கான வாய்ப்புக்களே கிடையாது. வெறும் மிரட்டல்களும் சிறு சிறு மோதல்கள் அங்காங்கே நடக்கலாம். ஆனால் முழு அளவிலான போர் என்பது கிடையாது என்ற கருத்தையே நாம் முன்வைக்கின்றோம். இது போன்றுதான் விடுதலைப் போராட்டங்களின் வடிவிலும் விரைவில் மாற்றங்களுக்கு இடமிருக்கின்றது. அங்கு இந்த யுக்த்திகள் சம்பிரதாய முறையில் இருந்து மாற்றமடைய இடமிருக்கின்றது.

அரசியல் தலைமைகளும் ஊடகங்களும் மக்களை பயமுறுத்துவதைத் தவிர நாடுகளின் பாதுகாப்பு யுத்த தந்திரங்கள் எல்லா வற்றிலும் மிகப் பெரிய மறைக்கப்பட்ட பக்கங்கள் நிறைய இருக்கின்றன. நாம் முன்பு சொன்ன சம்பிரதாய கதைகளுடன் நாம் இப்போது புத்தின் இந்தியா விஜயம் பற்றிப் பேவோம். நாம் இந்தக் கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் இந்திய இராணுவத்தின் கூட்டுப் படைகளின் தளபதி அவரது மனைவி என்று இன்னும் பதிமூன்று பேர் குன்னுரில் நடந்த ஹெலி விபத்தில் மரணித்த்திருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில் இந்து-பாக் மோதல்கள் என்றால் ரஷ்யா இந்தியா பக்கமும் அமெரிக்க மற்றும் சீனா என்பன பாக். பக்கமாக இருந்து வந்திருக்கின்றன. ஆனால் இன்று அமெரிக்க அந்த நிலைப்பாட்டில் இல்லை என்பது தெளிவான விடயம். ரஷ்யாவுடன் இந்திய நெருங்குகின்றது என்றால் அது அமெரிக்கவுக்கு வலிக்கின்றது. அதே போன்று சீனாவுக்கும் அந்த வலி வருகின்றது. இது ஏன் என்று விளக்குவதானால் இன்று உலகில் நான்காவது பெரிய இராணும் இந்தியா எனவே இந்திய தனித்து இருப்பது வேறு கதை. அது அமெரிக்கா கூட்டிலோ அல்லது ரஷ்யா ஆதிக்கத்தில் வருகின்றது என்றால் அங்கு நிச்சயமாக பாதுகாப்பு துறைகளுடன் நோக்குக்கின்ற போது இது உலக சமநிலையில் ஆட்டம் காண்கின்ற ஒரு விவகாரம். அங்கே சமநிலை மாறுகின்றது என்பது எமது கருத்து. எனவேதான் நாம் மேற் சொன்ன நாடுகளுக்கு அந்த வலிகள் ஏற்படுகின்றன.

இன்று ரஷ்யாவுடன் சீனாவுக்கு மிக நெருக்கமான உறவுகள் இருக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் அமெரிக்கா விவகாரத்தில் இருக்கின்ற அச்சம் என்பது தெளிவு. இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க இந்தியாவை தன்பக்கம் வளைத்துப் போட விரும்புகின்றது. ஆனால் இதிலுள்ள சாதக பாதக நிலையை இந்தியத் தலைவர்கள் நன்றாக உணர்ந்திருப்பதால் அவர்கள் மிகவும் அவதானமாக காய் நகர்த்தி வருகின்றார்கள். சீனாவுடன் இந்தியாவுக்கு நல்லறவு இல்லாவிட்டாலும் சீனாவை சீண்டிப் பார்க்க இந்திய விரும்பவில்லை என்பது எமது அவதானம். நிச்சமாக புதின் வருகை இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைக்க இருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

கொரோனா தொற்றுக்கப் பின் இது புதினின் இரண்டாவது வெளி நாட்டுப் பயணம். இந்திய அமெரிக்க பக்கம் செல்வதை புதின் ஒரு போதும் விரும்ப மாட்டார். இந்திய எல்லையில் சீனாவுடன் ஏற்படுகின்ற மோதல்களைத் தவிர்ப்பதில்தான் அவர் ஆர்வமாக இருக்கின்றார். அதே நேரம் இந்தியாவின் நெருக்கமான நாடு ரஷ்யா. தனக்குத் தேவையான இராணு உபகரணங்களுக்கு அது வழக்கமாக ரஷ்யாவைத் தான் நெடுங்காலமாக நம்பி இருக்கின்றது. மேலும் சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் கருத்துக்களும் ரஷ்யாவின் கருத்துக்களும் ஏறக்குறைய சமமாக இருக்கின்றன. மத்திய கிழக்கு விவகாரம், ஈரான் விவகாரம் என்பவற்றை நாம் இங்கு சுட்டிக் காட்ட முடியும. அதே நேரம் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றில் என்றமில்லாத ஒரு உறவு மோதி காலத்தில் வளந்திருக்கின்றது. அது இரணுவ மட்டத்திலும் உயர் நிலையில் இருக்கின்றது. என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இரு நாடுகளும் ஏகே 203 துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, மற்றும் 2018ல் 5.43 பில்லயன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்கள் விவகாரத்தில் இந்தியாவுக்கு சாதகமான நிலை இந்த சந்திப்பில் இடம் பெற்றிருந்தன. இந்த சாதனங்களை ஏற்கொனவே ரஷ்யா சீனாவுக்கு வழங்கி இருந்தது. அதனை இந்தியாவும் பெறுவது என்பது ஒரு பாதுகாப்பு சம நிலை. அதே போன்று ரஸ்யாவின் தெற்குத் தொலைத் தூரங்களில் உள்ள இடங்களில் இந்திய பல அபிவிருத்தி வேலைகளைச் செய்ய ஏற்பாடுகளும் இந்த சந்திப்பில் பேசப்பட்டிருக்கின்றன.

இந்த மோடி-புத்தின் சந்திப்பில் ஆப்கான் விவகாரமும் முக்கிய பேசு பொருளாக இருந்துள்ளது. ஆப்கான். விவகாரத்தில் சீனாவையும் அமெரிக்காவையும் அழைத்துப் பேசிய ரஷ்யா அதற்கு இந்தியாவை அழைக்கவில்லை. காரணம் தலிபான்கள் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் முரன்பாடுகள் இருக்கின்றன.

ரஷ்யா ஆப்கான். விவகாரத்தில் பாகிஸ்தானுடன் இணைந்து செயலாற்றுகின்றது. இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக போக முயன்றால் ரஷ்யா பாகிஸ்தான் உறவில் ஆர்வம் கொள்வது தவிக்க முடியாத ஒன்று. ஆப்கான் விவகாரத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்திய அழைப்பை ஏற்று ரஷ்யா அதில் கலந்து கொண்டு நல்லெண்ணத்தைக் காட்டி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏஸ்.400 விவகாரத்தில் அமெரிக்க எதிர்ப்பையும் மீறி இந்;திய ரஷ்யாவுடன் நெருக்கமாவது அமெரிக்காவுக்கு அசௌகரிகமான ஒன்று. பெரும்பாலும் இந்திய முன்பைவிட அமெரிக்காவுடன்; நெருக்கமாக செல்வதையும் அவதானிக்க முடியாது. இது சீன மீதுள்ள நெருக்கடியாகவே நாம் பார்க்க வேண்டும். என்றாலும் ரஷ்யாவையும் பகைத்தக் கொள்ளாமல் இந்தப் பயணத்தை தொடர வேண்டி கட்டாயமும் இந்தியாவுக்கு இருக்கின்றது. சீனாவும் ரஷ்யாவும் ஒரு அணியில் இருக்கின்ற போது தொலைவில் இருக்கும் அமெரிக்காவை நம்புவதும் சிக்கலான ஒன்றுதான். நமது நியதிப்படி நாடுகள் தமது தேவைக்காக பகைவர்களுடன் இணைவதும் நண்பர்களைக் கைவிட்டு விடுவதும் வரலாறுகள் பூராவிலும் நடந்துதான் வந்திருக்கின்றன. என்னதான் இருந்தாலும் நாடுகள் பாதுகாப்பு விவகாரங்களில் ஆர்வமாக இருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்தாலும் அது தமது பாதுகாப்பு ஒரு உந்து சத்திதான் என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று ஆளற்ற விமானங்கள் போர்க் களத்தில் இது வரை பெரிய படைப் பலமாக பாவிக்கப்பட்ட டாங்கிகளின் செயல்பாடுகளை பெறுமதியற்றதாக்கி இருக்கின்றது. என்னதான் இருந்தாலும் பாரியளவில் அல்லது முழு அளவிலான போர்களுக்கு சமகாலத்தில் வாய்ப்புக்களே கிடையாது.

எனவேதான் எதிரியின் முதுகொலும்பை முறித்து தமது பாதுகாப்பை உறுதிப் படுத்துகின்ற ஒரு இராஜ தந்திர நகர்வும் உலக அரங்கில் தற்போது நடந்து கொண்டு வருகின்றது. சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்த உத்திகளைத்தான் தற்போது வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கின்றன. சீன பொருளாதார ரீதியிலும் இஸ்ரோல் சதிவேலைகள் மூலமாகவும் அந்தக் காரியத்தில் நல்ல அறுவடைகளை இது வரை பெற்றிருக்கின்றன. ஈரானில் நடக்கின்ற வெடிப்பு சம்பவங்களும் இதில் அடங்குகின்றன.

இந்திய-பாகிஸ்தான் அரசியல் உறவுகளில் என்னதான் பகைமைகள் இருந்தலும் முறுகல் நிலைகள் இருந்தாலும் அங்கும் முழு அளவிலான போருக்கு வாய்புக் கிடையாது. அதே போன்றுதான் சீன விவகார்திலும் இருக்கின்றது. பொருளாதாரமும் இராணுவ வல்லமையும் அத்தியசியமானதுதான். ஆனால் அதன் யுக்த்திகள் அனைத்தும் இன்று மாற்றமடைந்திருக்கின்றன. இதனை நாடுகள் புரிந்து கொள்ள இன்னும் சில காலம் செல்லும்.

நன்றி- ஞாயிறு தினக்குரல்

Previous Story

ரஜினிகாந்த் பிறந்தநாள்

Next Story

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை   மத்திய சுகாதார அமைச்சின் கீழ்.