ரணிலை அவமதிக்கும் செய்திகள்!

 நஜீப்

தற்போதய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின் வேண்டுகோள்கள் கட்டளைகளை ஆளும் கட்சியினர் மற்றும் எதிரணியைச் சேர்ந்தவர்கள் துச்சமாக மதித்து நடந்து கொள்கின்ற சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றது. மக்கள் எழுர்ச்சியின் போது பாதிக்கபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இழப்பீடுகள் தொடர்பாக கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி அழைத்திருந்த போது  பாதிக்கப்பட்டவர்களில் அரைவாசி பேர் கூட அங்கு சமூகமளித்திருக்கவில்லை.

அதே நேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு ரணில் உயர் பதவியொன்றை வழங்கி இருந்தார். மறுகணமே உம்மிடம் பதவி பெற்றுக் கொண்டு சுகபோகங்களை அனுபவிக்க நான் ஒன்றும் இழிச்சவாய் கிடையாது என்று அந்த நியமனத்தை சந்திரிக்க நிராகரித்ததுடன் இப்படிப் பதவிகளை கொடுக்க வேறு ஆட்களை பார்த்தக் கொள்ளுமாறும் ரணிலை கோட்டிருக்கின்றார்.

மேலும் தலைமறைவாக இருந்த ராஜபக்ஸாக்கள் வெளியே வந்து ஒன்றாக மீள் எழும் களுத்துறையில் கூட்டம் நடத்த ரணிலே காரணம் என்று அந்தக் கட்சி செயலாளர் ரங்கே பண்டார சொன்ன கருத்தும் மொட்டுத் தரப்பால் கடும் விமர்சனத்துக்கு இலக்காகி இருக்கின்றது.

நன்றி:16.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

UK: ரிஷி சுனக்கை பிரதமராக்க முயற்சி- லிஸ் டிரசுக்கு நெருக்கடி

Next Story

ஷி ஜின்பிங்: சீனாவின் வீழ்த்த முடியாத தலைவராக உருவாக இவரால் எப்படி முடிகிறது?