யாழ் நகரில் சுதந்திரதினத்திற்கு ஆதரவாக பேரணி?

இன்றையதினம் இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் பரவலான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், யாழ் நகரில் சுதந்திரதினத்திற்கு ஆதரவாக பேரணியொன்று இடம்பெற்றது.

பேரணிக்காக பெருமெடுப்பில் வெளிநபர்களை களமிறக்கி சுதந்திரதின பேரணியும், கேளிக்கை நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

இதன்போது யாழ் பண்ணை பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டவர்கள் யாழ் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து  வீரசிங்கம் மண்டபத்திற்கு சென்றனர்.

பேரணியில் சுமார் 40 முச்சக்கர வண்டிகள், 80 மோட்டார் சைக்கிள்களும் பங்கேற்றது. இந்நிலையில் தற்போது வீரசிங்கம் மண்டபத்தில் கேளிக்கை நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதற்காக மிகப்பெருமெடுப்பிலான ஒலி, ஒளி அமைப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இத்ற்காக சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமை சேர்ந்த சிலரும் , நாவற்குழியில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களும், அவர்களுடன் வெளியிடங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட சிங்களம் பேசுபவர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

Previous Story

ISIS ஆப்ரேஷனில் என்ன நடந்தது?

Next Story

'ஹபாயா’ சர்ச்சை: