நஜீப்
நன்றி:09.08.2026 ஞாயிறு தினக்குரல்
சில தினங்களுக்கு முன்னர் வசந்த முதலிகே, மொட்டு நாமலின் செயல்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டிருந்தார். தன்னாலோ தனது குடும்பத்தினராலோ எதுவுமே நடக்கவில்லை அவர்கள் அதிகாரத்தில் இருந்த போது நாட்டுக்கு நல்லதை செய்தார்கள்.
ஏதுமே தவறுகள் நடக்கவில்லை என்ற தோரணையில் இப்போது நாமல் புதுக்கதை சொல்லி வருகின்றார். இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
தனது அப்பன், சித்தப்பா அதிகாரத்தில் இருந்த நாட்களில் இவர்கள் எப்படி எல்லாம் ஆட்டம் போட்டார்கள், பொது மக்கள் உடமைகளைக் கொள்ளையடித்தார்கள் அரசியல் படுகொலைகளைப் பண்ணினார்கள் என்பது.
எனவே பசுத்தோல் போர்த்திக் கொண்டு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற இவர்களது எதிர்பார்ப்புகள் வெறும் பகல் கனவு. இதனை நாமல் புரிந்து கொள்ள வேண்டும்.
களத்துக்கு வந்து மோதிப்பாருங்கள் அப்போது என்ன நடக்கும் என்பது புரியும் என்றும் முதலிகே எச்சரித்திருக்கின்றார்.





