நஜீப்
நன்றி: 17.08.2025 ஞாயிறு தினக்குரல்
சு.கட்சி செயலாளராக இருந்து திடீரென ஸ்கெப்பாகி மஹிந்தவுக்கு எதிரான பொது வேட்பாளராக மறுமுனையில் தோன்றி அதிரடியாக ஜனாதிபதியானார் மைத்திரி.
அப்படி அதிகாரத்துக்கு வந்தவர் ரணிலின் சீண்டல்கள் தாங்க முடியது ஒரு நாள் மஹிந்தாவை தொடர்பு கொண்டு, நான் ரணிலை விரட்டப் போகின்றேன்.
நீங்கள் பிரதமர் பதவியை ஏற்கவேண்டும் எனக் கேட்க ஓகே சொன்னார் மஹிந்த. பின்னர் ரணிலை விவாகரத்துச் செய்து விட்டு எதிரியான மஹிந்தவை பிரதமராக்கி குடித்தனம் துவங்கி உடனே ரணிலை அலரி மாளிகையை விட்டும் வெளியேறுமாறும் கட்டளையிட்டார் மைத்திரி.
பிரதமரான மஹிந்த மறுகனமே ரணிலைத் தொடர்பு கொண்டு மைத்திரி சொல்வதற்காக நீங்கள் அலரி மாளிகையில் இருந்து வெளியேற வேண்டாம்.
நடப்பதை நான் கவனிக்கின்றேன் என்றார். என்னதான் பதவி கொடுத்து தான் நேசக்கரம் நீட்டினாலும் என்னைப் பழிவாங்குவதில் மஹிந்த உறுதியாகவே இருந்தார் என்றார் மைத்திரி.





