முஸ்லிம்கள் தலையில் கொம்பு என கருதும் நமது தலைவர்கள்

ஹிஸ்புல்லாஹ் விடுகின்ற கதை

Sri Lanka: Muslim refugees fear repercussions after jihadist attacks | DW Stories

இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தினர் தலைகளில் கொம்பு முளைத்திருக்கின்றது என்ற எண்ணத்தில்தான் முஸ்லிம் தலைவர்களும் அவர்களது கையாட்களும் தேர்தல் களத்தில் இப்போது பேசி வருகின்றார்கள். அதனால்தான் உண்மைக்குப் புறம்பான கதைகளை அவர்கள் பேசி வருகின்றார்கள்.

அவர்கள் இப்படிப் பேசி எப்படியாவது அணுரகுமாரவைத் தேர்தலில் தோற்கடித்தால்தான் அரசியலில் தமது வழக்கமான வியாபாரத்தை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதனால்தான் அபாண்டங்களை நா கூசாமல் பரப்பிக் கொண்டு வருகின்றார்கள்.

 

ஆனால் அவர்கள் அப்படிப் பேசுகின்ற கதைகள் அடுத்த நிமிடத்திலே சாம்பலாகி விடுகின்றன. போலியான கட்டுக்கதைகள் நவீன தொழிநுட்பத்தினால் செயலிழந்து விடுகின்றன. என்றாலும் அவர்கள் மற்றும் ஒரு புதிய பொய்யைச் சொல்லி மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்ற முனைகின்றார்கள்.

Muslim Women: Second-Class Rights Holders in Sri Lanka's Quazi System - Groundviews

முஸ்லிம் தாய்மார் கருவறை பற்றிய ஹக்கீம் கதையும் அப்படி ஒன்றுதான். அது பற்றி பிரிதொரு இடத்தில் நாம் பேசி இருக்கின்றோம். இப்போது அணுர விடயத்தில் ஹக்கீம் அடக்கி வாசிக்கின்றபோது, இப்போது ஹிஸ்புல்லாஹ் அணுராவுக்கு சேறுபூசும் பணியைத் துரிதப்படுத்தி வருகின்றார்.

Anti-Muslim Violence; Conspiracy Against Relations Between Sri Lanka And Muslim Countries - Pakistan Observer - Colombo Telegraph

ஒரு பிரதி அமைச்சையாவது பெற்றுக் கொள்ளும் முயற்சியாகவும் இது இருக்கலாம். தனது விடயத்தில் தலைவர் ஹக்கீம் எப்படி ஜாக்கிரதையாக இருப்பார் என்பது கலாநிதிக்கும் நன்கு தெரியும். அப்படி ஒரு கதைதான் இது.

அணுர பற்றி கலாநிதி அபாண்டம்.

கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மிகவும் சிறப்பான ஒரு செயல்பாட்டுக்காரன் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அவர்தான் இன்று மு.கா.வுக்கு தலைவராக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் கிழக்கில் இருக்கின்ற பிரதேசவாதம் அவருக்கு அந்த பதவியை அடைவதில் தடையாக இருக்கின்றது. அடுத்து ஹக்கீமின் பிரித்தாளும் கொள்கையும் இதற்குக் காரணம்.

 

Women Bound to Muslim Law in Sri Lanka Seek Changes to End Discrimination
இப்போது இந்த ஹிஸ்புல்லா பற்றி சற்றுப்பார்ப்போம். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்பதும் அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்ற உறுப்புரிமையை புனித குர்ஆனில் போட்ட சத்தியத்துக்கு இணங்க விட்டுக் கொடுக்க மறுத்தார்.

பின்னர் அந்தப் பதவியை தொடர்ந்தும் நயவஞ்சகத்தனமாக தன்னுடன் வைத்துக் கொண்டு கண்டி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காதர் ஹாஜீயாரும் இணைந்து தலைவர் அஸ்ரஃபுக்கே எதிராகவே செயல்பட்டவர்தான் இந்தக் கலாநிதி

Previous Story

சஜித் மேடையில் அதிருப்தி

Next Story

இனவாதிகளின் முதுகெலும்பை முறித்ததே அணுரகுமார தான்!