முஸ்லிம் வாக்காளர்களும் என்பிபி. வேட்பாளர்களும்!

இந்த நாட்டில் இருக்கின்ற மொத்த முஸ்லிம் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட ரீதியில் அவர்களின் எண்ணிக்கை என்பன பற்றி நாம் பிரிதொரு இடத்தில் பதிந்திருக்கின்றோம். அது அப்படி இருக்க என்பிபி-அனுர தரப்பு முஸ்லிம் வேட்பாளர்கள் தொடர்பில் சாதக பாதக விமர்சனங்கள் இருக்கின்றன. இப்போது அது பற்றி சற்றுப் பார்ப்போம்.

என்பிபி. வேட்பாளர்கள் தெரிவு ஏனைய கட்சிகளில் நடைபெறுகின்ற ஒழுங்கில் நடைபெறுவதில்லை. என்பதனை முதலில் முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். பணப்பலமோ கல்வி மட்டமோ ஜனரஞ்சகமோ இங்கு தகைமைகளாக கருதப்படுவதில்லை. நம்பிக்கை விசுவாசம் செயல்பாடு தூய்மை என்பவைகள்தான் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

விண்ணப்பிப்போர்கள் எல்லோருக்கும் இங்கு வேட்புமனுக் கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு கண்டி மாவட்டத்துக்கு 547 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன. அதில் சம்மந்தமே இல்லாதவர்களும் பல கட்சிகளுக்கு ஒரே நேரத்தில் வழக்கமாக விண்ணப்பிப்போரும் அங்கு இருந்தார்கள்.

என்பிபி.யில் வேட்பாளர் தெரிவில் ஒரு கொள்கை ஒழுங்கு முறை கட்டுப்பாடு இருக்கின்றது. வெளியில் இருந்து பார்ப்போருக்கு இதில் விமர்சனங்கள் இருந்தாலும் அப்படி விமர்சனங்களைச் செய்வோர் எந்தளவுக்கு என்பிபி. கொள்கை கோட்பாடுகளை அறிந்து வைத்திருக்கின்றார் அவர்களின் அரசியல் புரிதல் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

இதற்கு ஒரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டலாம் என்று எதிர்பார்க்கின்றோம். கண்டி மாவட்டத்திற்கு நாட்டிலே ஜனரஞ்சகமான டாக்டர் ஷhபியை என்பிபி. வேட்பாளராகக் கொண்டுவர ஒரு முயற்சி நடந்தது. முதலில் அவர் மறுத்தாலும் பின்னர் அதற்கு டாக்டரின் சம்மதமும் பெறப்பட்டிருந்தது.

இது போன்று முன்னாள் அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் என்பிபி.யில் வேட்புமனுப் பெற முயற்சித்தார்கள். போட்டி போட்டார்கள். வன்னியில் முஸ்லிம் சமூகத்து அரசியல்வாதி ஒருவர் மாவட்டத்தில் முழு தேர்தல் செலவுகளையும் தான் தனியாக ஏற்பதாகவும் மேலும் கட்சித் தேர்தல் செலவுகளுக்காக கோடிக் கணக்கில் காசு தருவதாகவும் சொல்லி வேட்பு மனுவை எதிர்பார்த்தார்.

இது போன்று இன்னும் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னாள் அமைச்சர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். இது தவிர ரஞ்சன் ராமநாயக்க டலஸ் அலகப்பெரும போன்றவர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டதும் தெரிந்ததே.

என்பிபி. யின் கொள்கை ரீதியிலான தீர்மானங்களின்படி அவர்களுக்கு அங்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. டாக்டர் சாபி விகாரத்தில் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட ஒரு சிலரில் நாமும் இருந்ததால் நமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கு என்பிபி. தரப்பில் கூறப்பட்ட நியாயங்கள் நமக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அவர்கள் விவாதத்தில் நியாயம் இருந்தது.

எனவே வேட்பாளர் தெரிவில் தவறுகள் நடந்திருக்கின்றது. தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற விமர்சனம் இப்போது எமது பார்வையில் நியாயமற்றது-தவறானது இந்த என்பிபி. வேட்பாளர்களில் 35 பெண். வேட்பாளர்களில் முஸ்லிம்கள் 28பேர். அதில் பெண்களும் இருக்கின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் வேட்பாளர்களில் ஆலிம்கள் சட்டத்தரணிகள் வைத்தியர்கள் பொரியியலாளர்கள் ஆசிரியர்கள் பட்டதாரிகள் வர்த்தகர்கள் என்று பலதரப்பட்டவர்களும் அங்கு இருக்கின்றார்கள். அதே போன்று இவர்களின் வேட்பாளர்கள் பற்றி மக்களுக்கு தெரியாது என்றும் ஒரு பொதுவான குற்றச்சாட்டும் இருக்கின்றது.

1994ம் ஆண்டு சந்திரிகா காலத்தில் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அன்றும் ஜேவிபி தெரிவு செய்திருந்த வேட்பாளர்களை யாருக்கும் தெரியாது. ஆனால் போட்டியிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்பின் தெரியாது என்று சொன்ன அவர்களது வேட்பாளர்கள்தான் முதலிடத்துக்கு வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.

ஜேவிவி-என்பிபி என்பது புதிய காலாச்சாரங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்ற ஒரு அமைப்பு. இவர்கள் பற்றிய விமர்சனங்களுக்கு வருகின்ற அக்தோபர் மாதம் 14ம் திகதி பதில் கிடைக்கும். சஜித் அணியுடன் ஒப்பிடும் போது என்பிபி. இந்தத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு அதிக வாய்ப்புக் கொடுத்திருக்கின்றது. இது இந்த விமர்சகர்களின் கண்களுக்கு ஏனோ தெரிவதில்லை.

Previous Story

SJB - SLMC கூட்டணி  முறிந்தது! UNP போல SJB யும் ஏமாளிகளா?

Next Story

அனுர மு.கா. செயலாளர் வீட்டிலே குடிவாழ்கின்றார்!