முன்னாள் அமைச்சர் நிமல் லான்சா கைது

முன்னாள்  இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2006 ஆம் ஆண்டு நடந்த  போராட்டம் ஒன்றின் போது சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நிமல் லான்சா மீது சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Story

புதின்-கிம் இருவரையும் ஒரே நேரத்தில் சந்திக்கும் ஜின்பிங்!

Next Story

உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யா!