முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார்

ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 64 ஆவது வயதில் இன்று (18) காலமாகியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை

ஜே.வி.பி.யின் ஆரம்பகால உறுப்பினரான இவர், ஜே.வி.பி.யைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.

இதன் பின்னர், ஜே.வி.பி.யிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து, பாணந்துறை மாநகர சபையின் மேயராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஈரான்:போருக்கு முன்பே அமெரிக்க தோற்று விட்டது.

Next Story

அமெரிக்கா வரை பாயும் IRAN ஏவுகணை!