முதலிக்கும் தேர்தலுக்கும் முடிச்சு!

-நஜீப்-

மக்கள் அபிமானத்தைப் பெற்ற வசந்த முதலிகே நெடுநாள் சிறைவாசத்துக்குப் பின்னர் வெளியே வந்திருக்கின்றார். ஆனால் அவருக்கு எதிராக மேலும் சில வழக்குகள் நிலுவையில். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மக்கள் நலனுக்கான போராட்டத்தில் கைதாகி அவர் விடுதலையில் நமக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

ஆனால் இது இலங்கையின் நீதித்துறையின் சுயதீனமான செயல்பாட்டையே காட்டுகின்றது என ஆளும் தரப்பினர் வரும் நாட்களின் பேசக்கூடும்.

இதனை வைத்து வரும் 10ம் திகதி தேர்தல் தொடர்பான வழக்கில் ஏதும் அட்டகாசம் நடந்து நீதியே அப்படிச் சொல்லி விட்டது நாங்கள் என்ன பண்ண முடியும் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் பேச ஒரு அசாதாரண தீர்ப்பு வந்து விடுமோ என்ற அச்சம்-சந்தேகம் நமக்கு ஏற்பட்டிருக்கின்றது.

முதலிகே விடுலைக்கு நீதிமன்றின் சுயதீன பரப்புரை தேர்தலுக்கு ஆப்பாகிவிடாமல் இருந்தால் ஓகோ. நாம் எதனைச் சொல்ல வருகின்றோம் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

சட்டக்கல்லூரி முதல்வரே நாமலுக்கு ஆள் வைத்து  பரீட்சையில் சித்தியடைய ஏற்பாடு செய்த தேசம் அல்லவா இது. ஆதாரபூர்வமாக பேராசியர் ஒருவர் இதை ஊடகங்களுக்குச் சொல்ல, கதை இப்போ வைரலாகி வருகின்றது.

நன்றி: 05.02.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாகிஸ்தானில்  முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

Next Story

காற்றோடு பஞ்சாகிய ஜனாதிபதி தீர்வு!