மீண்டும் ரிஸ்வி வைத்தியசாலை அபிவிருத்தி குழுவுக்கு நியமனம்!

வைத்தியசாலைகள் அபிவிருத்தி தொடர்பான குழுக்கள் இலங்கையில் நெடுநாளாக இருந்து செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் வைத்தியசாலைகளில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதும் தெரிந்ததே.

இந்தக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் சுகாதார அமைச்சரினால் நியமனம் செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போதய சுகாதார அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்வெல அவர்களினால் எஸ்.எம்.ரிஸ்வி இந்தக் குழுவுக்கு மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். இது மூன்று வருடங்களுக்கான நியமனம்.

கண்டி பிரதான வைத்தியசாலைக்கான இந்த உறுப்புரிமையை இதற்கு முன்னரும் ரிஸ்வி பல தடவைகள் தெரிவு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நியமனக் கடிதத்தை கண்டி வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திசர பெரேரா அவர்கள் அண்மையில் ரிஸ்விக்கு உத்தியோகபூர்வமாகக் கையளித்திருக்கின்றார்.

கடந்த காலங்களில் இந்த அபிவிருத்திக் குழுவின் மூலம் கண்டி வைத்தியசாலைக்கு பல அபிவிருத்தி வேலைகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த அபிவிருத்தி வேலைகளை கண்டி வைத்தியசாலைக்கு செய்து கொடுப்பதில் ரிஸ்வி முன்னோடியாக இருந்து வந்திருக்கின்றார்.

அத்துடன் நோன்பு காலங்களில் வைத்தியாசாலையில் இருக்கின்ற நோயாளிகள் அல்லது அவர்களைப் பராமரிக்கின்றவர்கள் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகளை செய்வதிலும் இவர் முக்கிய பங்கு வகித்து வருகின்றார்.

பிரேதங்களை வைத்திருக்கும் இடத்தில் காத்திருக்கும் மக்களின் நலன்களுக்காக ட்ரன்ஸ் கல்ப்; நிருவன அணுசரனையைப் பெற்று தங்குமிடத்தை நிர்மானிப்பதிலும் இவர் முன்னோடியாக செயலாற்றி இருக்கின்றார்.

குறிப்பாக முஸ்லிம் மையங்களை எடுப்பதில் எதிர்நோக்கும் சிரமங்களின் போதும் இவர் நிறையவே உதவி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வைத்தியசாலை புற்றுநோய் தொடர்பான குழு, கண்டி ட்ரஸ் நிறுவனம், கண்டி வர்த்தகர் சங்கம், முஸ்லிம் லீக் ஆகியவற்றிலும் இவர் முக்கிய உறுப்பினராக இருந்து சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவர் உகுரசப்பிடியவை பிறப்பிடமாகவும் கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

கோட்டா வரவுக்கு பின்னய அரசியல்!

Next Story

2ம் எலிசபெத் ராணி: UK அரச குடும்ப அரியணை வாரிசு வரிசை