நஜீப்
04.01.2026 ஞாயிறு தினக்குரல்
சில தினங்களுக்கு முன்னர் அப்பாவி போல தான் ஐதேக-ஐமச இணைவுக்கு தடையாக இருக்கின்றேன் என சஜித் கருதினால் நான் ஒதுங்கிக்கொள்கின்றேன்.
சஜித் வந்து தலைமையை ஏற்றுக்கொள்ளட்டும் என்று சொன்ன ரணில் சில மணி நேரங்களுக்குள்ளே நான் நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருக்கின்றேன். என்னால் அரசாங்கத்தை பொறுப்பேற்று நாடாளமுடியும் என்றும் வேறு அறிவித்திருக்கின்றார்.
இது ரணிலின் பச்சோந்தித்தனத்தை காட்டுகின்றது. எனவே ரணிலை நம்பமுடியாது என சஜித் தனது சகாக்களிடம் சொல்லுவது யதார்த்தமாகின்றது. இதற்கிடையில் ரணில் நாடாளுமன்றம் வரவும் ஏற்பாடுகளாம்.
இதனை ஒரு போதும் சஜித் ஜீரணிக்க மாட்டார். அப்படி ரணில் உள்ளே வந்தால் நாடாளுமன்றத்தில் சஜித் காணாமல் போய்விடுவார். நாமலை அடுத்த ஜனாதிபதியாக்குவதே ரணிலில் திட்டம்.
இதற்கிடையில் தனது கட்சிக்காரர்களைத் சமாதானப்படுத்த ஐதேக. முக்கியஸ்தர் சிலரைச் சந்தித்து இணைவு பற்றி சஜித் போசி இருக்கின்றார்.!




