மார்ச்சில் அரசு கவிழ்கிறது!

நஜீப்

04.01.2026 ஞாயிறு தினக்குரல்

அனுர தலைமையிலான என்பிபி. அரசு மார்ச்சில் கவிழ்கின்றது. அடித்துக் கூறி இருக்கின்றார் ஐதேக. செயலாளர் தலதா அதுகோரல. இதற்கு முன்னரும் இந்த அரசு ஒரு வாரமும் நீடிக்கமாட்டாது. ஆறு மாதங்களுக்கும் தாக்குப்பிடிக்காது என்றும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன.

தலதா இந்த அரiசைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அனுராவுக்கு ஆலோசனைகளை முன்வைத்திருப்பதுதான் இதிலுள்ள பெரிய வேடிக்கை. முன்னாள் ஜனாதிபதி ரணிலை அரசின் பங்காளியாக சேர்த்துக் கொண்டு அவரது ஆலோசனையைப் பெற்றுக் கொண்டால் அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர் கூறுகின்றார்.

அதே நேரம் சஜித்துடன் இணைந்து அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கும் ஒரு முயற்சியை ஐதேக. செய்கின்றது. ரணில் ஜனவரியில் இருந்து அரசை வீட்டுக்கு அனுப்பி வைக்கின்ற முயற்சிகள் துரிதப்படுத்தப்படும் என்று வேறு பேசி வருகின்றார்கள். இது என்ன விசர் கதை. என்ன முரண்பாடு என்பதனை குடிகள் யோசிக்க வேண்டும்.

Previous Story

வெனிசுவேலா மீது அமெரிக்கா பெரிய தாக்குதல்: 

Next Story

யார் இந்த நிக்கோலாஸ் மதுரோ?