மாமன் மருமகன் விளையாட்டு!

நஜீப்

தற்போதய ஜனாதிபதி ரணில், மாமனார் ஜே.ஆர். அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை தனக்கு நாடாளுமன்றத்தில் இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையை வைத்து கொண்டு வந்தார். அப்போது அது ஆறு மாதங்களுக்கு மட்டுமே அமுலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இது நற்பது (40) வருடங்கள் தொடர்ந்தது.

ஆனால் இன்று ரணில் கொண்டு வரப்போவது இதனைவிட பல மடங்கு கொடூரமான ஒரு சட்டமே  இது. எப்படி என்றால் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மீது போடப்பட்ட அணு குண்டுகளை விடவும் பல்லாயிரம் மடங்கு நாசத்தை உண்டு பண்ணக் கூடிய அணு குண்டுகளை நாடுகள் இன்று உற்பத்தி செய்து கைவசம் வைத்திருப்பது  எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

அது போலத்தான் இதுவும்! வரும் மே மாதமளவில் அரசு இதனை நிச்சயம் கொண்டு வர இருப்பதாக நீதி அiமைச்சர் விஜேதாச உறுதியாகக் கூறுகின்றார். துரதிஷ;ட வசமாக இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் நம்மைப் போன்ற ஊடகவியலாளர்களுக்கு இதன் பின்னர் வேலை இருக்காது. அப்போது நமக்கு ஓய்வுதான்.

நன்றி: 09.04.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மல்யானா படுகொலைகள்: 36 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பால் இஸ்லாமியர்கள் விரக்தி

Next Story

புதிய எல்லை நிர்ணயம் தெற்கில் இனச்சுத்திகரிப்பு உறுப்புரிமைக்கும் ஆப்பு!