நஜீப்
நன்றி:02.08.2026 ஞாயிறு தினக்குரல்
அரசியலில் நண்பர்களும் பகைவர்களும் கிடையாது. ரணில் மஹிந்தவை கள்வன் கள்வன் என கத்தினார்? தந்தையின் சமாதியில் சத்தியம் செய்த சஜித் பினைமுறிக் குற்றவாளி ரணிலுடன் ஒரு போதும் இணைந்து அரசியல் செய்ய மாட்டேன் என்றார்.
சில ஊடகங்கள் இந்த காட்சிகளை அவ்வப்போது இன்றும் ஒளி ஒலிபரப்பி நினைவூட்டி வருகின்றன.
.jpg)
ஆனால் நாம் இங்கு சொல்லப் போவது சஜித்-நாமல் இணைந்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தை சில தினங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஸா சஜித்தை தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கினார் என்றும் ஒரு தகவல்.
இதன் உண்மைத் தன்மைகளை நமக்கு உறுதி செய்ய முடியவில்லை. 2029 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பொது வேட்பாளர். நாமல் பிரதமர் வேட்பாளர் என்று தலைப்பிட்டு நாம் சில மாதங்களுக்கு முன் ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம்.!கோதாவில் அனுராவுக்கு மோதுவதாக இருந்தால் இந்தக் கூட்டணி தேவைதான்.!




