மஹிந்த  உத்தரவினால்  உறுப்பினர்கள் அதிர்ச்சியில்!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதால், பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அத்துடன், இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, ​​அரசியலில் கிராம மக்களுடன் இணைந்து நடைமுறையில் செயற்பட்டுள்ளாரா என்பதுடன் கல்வியிலும் முதன்மை கவனம் செலுத்துமாறு மஹிந்த அறிவித்துள்ளார்.

மஹிந்த பிறப்பித்த உத்தரவினால் அதிர்ச்சியில் உறுப்பினர்கள் | Mahinda Rajapaksa Political Situation

மேலும், இந்த விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் மஹிந்தவை சுற்றியிருப்பவர்கள் அனைவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்கள் என்பதனால் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த உறுப்பினர்கள் அனைவரும் மஹிந்தவுடன் அனைத்து காலப்பகுதியிலும் இணைந்து செய்யப்பட்டவர்கள் என கூறப்படுகின்றது.

மஹிந்த பிறப்பித்த உத்தரவினால் அதிர்ச்சியில் உறுப்பினர்கள் | Mahinda Rajapaksa Political Situation

குறிப்பாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திறமையான இளம் பிரதிநிதிகளை முன்வைப்பதில் அதிக கவனம் செலுத்த பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விண்ணப்பங்களை தனித்தனியாக ஆராயவும் தீர்மானித்துள்ளது.

Previous Story

நடனத்தில் தொடங்கி கண்ணீரில் முடிந்த பிரேசிலின் உலகக் கோப்பை கனவு

Next Story

பசில் - வஜிர  இரகசிய திட்டம்!