மக்களுக்காக குரல் கொடுத்த ஹீரேவுக்கு நேர்ந்த கதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த 35 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தின் பிரதான பொதுக் கருத்தை மிகவும் நிதானமாகவும், விவேகமாகவும் பொலிஸாரிடம் முன்வைத்த இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட இளைஞன் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த இளைஞனின் தலையில் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 மணித்தியாலங்கள் வரை காணாமல் போயிருந்த இளைஞன் தாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த வரை நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த இளைஞன் பொலிஸாரின் முன்னால் வெளியிட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டிற்குள்ளாகியிருந்தார்.

இந்த கைது செய்யப்பட்ட இளைஞன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது, விசேட அதிரடி படையினரின் சீருடை அணிந்தவர்கள் தன்னுடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் கடுமையாக தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

அப்பா வீட்டுக்கு வாந்திடுங்கோ மகன் மனோஜ் ராஜபக்ச மன்றாட்டம்!

Next Story

"மிரிஹானவில் அடிப்படைவாதிகள்"