மகிந்த ராஜபக்ச பணம்:லொக்கு மோசடி?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார பெருந்தொகை நிதியை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மிகவும் சூட்சுமமான முறையில் அவ்வப்பொழுது பணம் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை பொலிஸாரை தொடர்புகொண்ட போதும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இதேவேளை, 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும் உதித லொகு பண்டார மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக கடமையாற்றினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான W.J.M. N லொக்கு பண்டாரவின் மகன் உதித லொக்கு பண்டார கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் அவர்கள் வீட்டில் நான்கு இலட்சம் பணத்தை அங்கு ஊழியம் பார்க்கும் ஒரு பெண் கையாடிய போது சிரந்தி அவரை வங்கிக்குக் காட்டிக் கொடுத்திருக்கின்றார்.

பின்னர் மஹிந்த அவளுக்கு கருணை காட்டி வெளியே எடுத்து இருக்கின்றார். மேற் சொன்ன பணம் ஐந்து கோடி வரை. அது மஹிந்த வகித்த பதவிகளுக்காக அவருக்கு நாடாளுமன்றம் அனுப்பிய காசுகள்.

அதனை அவர் நெடுநாள் கொடுக்கல் வாங்கள் செய்யவில்லை. அதனைத்தான் லொக்கு கையாடி இருக்கின்றது. லொக்குவின் தந்தைக்காக இதிலும் பிரதமர் எம்.ஆர் கருணை காட்ட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று தெரிகின்றது.

Previous Story

இலங்கையில் என்னதான் நடக்கிறது? சுவிஸ் நாட்டவர்!

Next Story

திடீர் சுகயீனம் - மருத்துவமனையில்  பிரதமர்! NOW OK