போர் வெற்றி -தோல்வி யாருக்கு!

‘அமெரிக்கா-ரஷ்யா-சீனா-இரான்’ 

அமெரிக்கா, ரஷ்யா, சீனா - இரான் போரால் வெற்றி யாருக்கு? தோல்வி யாருக்கு?

வீடுகளுக்கான வெப்பமூட்டும் எண்ணெய் கட்டண உயர்வு முதல், பாகிஸ்தானில் மின் கட்டணத்தைச் சேமிப்பதற்காகப் பள்ளிகள் மூடப்பட்டது வரை, மத்திய கிழக்குப் போரின் நிதி ரீதியான பாதிப்புகள் ஏற்கனவே கடுமையாக உணரப்படுகின்றன.

கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளவர்களின் நீண்ட பட்டியலுக்கு இணையாக, இதிலிருந்து பயனடைபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யார்?

வெற்றியாளர்கள்: நார்வே, கனடா மற்றும் ரஷ்யா

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்ட போதிலும், நாம் இப்போதும் எண்ணெய் மற்றும் எரிவாயுவையே பெரிதும் நம்பியுள்ளோம்.

அதிக அளவு எண்ணெய் இருப்புகள் உள்ள நாடுகள் பெரிய செல்வத்தை பெறலாம். அதனால்தான் கச்சா எண்ணெய் “கருப்பு தங்கம்” என்று அழைக்கப்படுகிறது.

விலைகள் உயரும் போது, உற்பத்தியாளர்கள் பொதுவாக லாபமடைகிறார்கள், அதே நேரத்தில் பயனர்கள் நஷ்டமடைகிறார்கள்.

மத்திய கிழக்கு எண்ணெய் வழங்கலின் மையம். ஹோர்மூஸ் நீரிணை அதன் முக்கிய பாதை ஆகும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா - இரான் போரால் வெற்றி யாருக்கு? தோல்வி யாருக்கு?

ஹோர்மூஸ் நீரிணையை இரான் கிட்டதட்ட மூடியது மட்டுமல்லாமல், வளைகுடாவில் உள்ள அமெரிக்க கூட்டாளி நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் தாக்கியது. இது கத்தார் மற்றும் செளதி அரேபியா போன்ற உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் மாற்று ஆதாரங்களைத் தேடுவதால், நார்வே மற்றும் கனடா போன்ற நாடுகள் பயனடையக்கூடும்.

2022-இல் ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்த பிறகு, பல நாடுகள் ரஷ்ய எரிவாயுவைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க முயன்றபோது, நார்வே உற்பத்தியை அதிகரித்து அதைப் பயன்படுத்திக் கொண்டது.

இதற்கிடையில், கனடாவின் எரிசக்தி அமைச்சர் டிம் ஹோட்சன் தனது நாட்டை “ஒரு நிலையான, நம்பகமான, கணிக்கக்கூடிய, மதிப்புகள் அடிப்படையிலான எரிசக்தி உற்பத்தியாளர்” என்று விரைவாக நிலைநிறுத்தினார். ஆனால் உற்பத்தியை எவ்வளவு உயர்த்த முடியும் என்ற கேள்விகள் உள்ளன.

டிம் ஹோட்சன் கனடா வணிகத்திற்குத் தயாராக உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார், ஆனால் உற்பத்தியை உயர்த்தும் அதன் திறன் குறித்துக் கேள்விகள் உள்ளன.

டிம் ஹோட்சன்

மாறாக, ரஷ்யாவே இதில் மிகப்பெரிய வெற்றியாளராக இருக்கக்கூடும். உலகளாவிய விநியோக நெருக்கடியைத் தணிக்க அமெரிக்கா விதிகளைத் தளர்த்தியுள்ளதால், இந்தியாவிற்கான ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விற்பனை 50% அதிகரித்துள்ளது.

சில மதிப்பீடுகளின்படி, மார்ச் இறுதிக்குள் ரஷ்யா கூடுதலாக 5 பில்லியன் டாலர் வரை ஈட்டக்கூடும், மேலும் 2022-க்குப் பிறகு எரிபொருள் தொடர்பான வருவாயில் இது அதன் மிகப்பெரிய ஆண்டாக அமையக்கூடும்.

வளைகுடா நாடுகளின் இழப்பில் மாஸ்கோவிற்கு ஒரு பெரிய லாபத்தை அமெரிக்கா வழங்கும் அபாயம் உள்ளது. மற்ற சாத்தியமான வெற்றியாளர்களும் உள்ளனர்.

சில நாடுகள் நிலக்கரி பயன்பாட்டை அதிகரிப்பதால், அந்த எரிபொருளின் விலையும் உயருவது இந்தோனீசியா போன்ற பெரிய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி அடைக்கப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் உற்பத்தியாளர்கள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

தோல்வியாளர்கள்: அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா

அமெரிக்காவைப் பொறுத்தவரை நிலைமை என்ன? எண்ணெய் விலை உயரும் போது அமெரிக்கா “நிறைய பணம் சம்பாதிப்பதாக” அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

நிச்சயமாக, கச்சா எண்ணெய் விலைகள் தற்போதைய அளவிலேயே நீடித்தால், அமெரிக்க எண்ணெய் உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு பல்லாயிரம் கோடி டாலர்கள் கூடுதல் வருவாயைப் பெறக்கூடும்.

ஆனால் அது அமெரிக்காவை ஒரு நிகர வெற்றியாளராக மாற்றாது.

முதலாவதாக, சில உற்பத்தியாளர்கள் மத்திய கிழக்கின் சீர்குலைவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணமாக, எக்ஸான் மொபில் நிறுவனம் கத்தாரின் ராஸ் லாஃபன் தொழில் மையத்தில் தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. அங்கு மார்ச் தொடக்கத்தில் இருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இரானிய ஏவுகணைத் தாக்குதல்களால் “பரந்த சேதம்” ஏற்பட்டுள்ளது.

இரண்டாவதாக, மொத்த விற்பனை விலைகள் குறைந்து வந்ததால் பல ஆண்டுகளாகத் திறனைக் குறைத்துக்கொண்ட பல ஷேல் உற்பத்தியாளர்களால் (பாறைகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்கள்) உற்பத்தியை விரைவாக அதிகரிக்க முடியாது.

மிக முக்கியமாக தனிநபர் அடிப்படையில், அமெரிக்கர்கள் இந்த உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் ஆவர்.

கடுமையான மிட்வெஸ்ட் குளிர்காலங்களில் வெப்பமூட்டும் வசதிகளைப் பயன்படுத்துவது முதல், வாகனப் போக்குவரத்து வரை அவர்கள் புதைபடிவ எரிபொருட்களின் ஏற்ற இறக்கமான விலைகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

எண்ணெய் விலைகள் 140 டாலராக உயர்ந்து அங்கேயே நீடித்தால், பொருளாதாரம் சுருங்கும் அபாயம் இருப்பதாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கர்கள் புதைபடிவ எரிபொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்கர்கள் புதைபடிவ எரிபொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

நிச்சயமாக, அந்தப் பாதிப்பில் அமெரிக்கர்கள் மட்டும் தனியாக இல்லை. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை ஐரோப்பிய நுகர்வோர் சார்ந்திருப்பது வளர்ச்சியில் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

கடந்த சில வாரங்களாகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உரங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து செலவுகள் விலை உயர்வு எதிரொலிக்கும் என்பதால், இந்த நிலை நீடித்தால் ஆண்டின் பிற்பகுதியில் பணவீக்கம் சுமார் 0.5% அதிகரிக்கக்கூடும்.

நல்ல செய்தி என்னவென்றால், பல ஆண்டுகளாக எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம், மேற்கத்திய நாடுகள் பொதுவாகக் கடந்த காலத்தை விட எரிசக்தி விலை அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் வலிமையைப் பெற்றுள்ளன.

ஆனால், உதாரணமாக, பிரிட்டன் எரிசக்தி நுகர்வில் பாதிக்கும் மேலானது எண்ணெய் மற்றும் எரிவாயுவாக இருப்பதால், வாகன ஓட்டிகள், வீட்டு வெப்பமூட்டும் கட்டணங்கள் மற்றும் உற்பத்தி போன்ற எரிசக்தி அதிகம் தேவைப்படும் துறைகள் இப்போதும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இது உலகில் பல நாடுகளுக்கும் பொருந்தும்.

எதிர்காலத்தில் விலைகள் எப்படி மாறும் என்பதிலேயே எல்லாம் இல்லை.அரசாங்கம் எப்படிப் பதிலளிக்கிறது என்பதிலும் இது சார்ந்துள்ளது.

பல அரசுகள் பெரிய அளவிலான உதவிகளை வழங்கத் தயங்குவதில் ஆச்சரியமில்லை, ஏனெனில் அவர்களின் நிதிநிலையும் நெருக்கடியில் உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல்

ஆசியாவில் என்ன நிலவரம்?

இருப்பினும், ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கிழக்கு நோக்கிச் செல்லும் எண்ணெய் மற்றும் திரவ எரிவாயுவின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கே உடனடி அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது.

ஆசியா தனது கச்சா எண்ணெய்யில் 59 சதவீதத்தையும், தென் கொரியா 70 சதவீதம் வரையிலும் மத்திய கிழக்கிலிருந்து பெறுகின்றன.

பாதிப்பு மற்றும் செலவு குறித்த கவலைகளால் அங்குப் பங்குகள் சரிந்துள்ள நிலையில், நாட்டின் சிப் தயாரிக்கும் தொழில்துறைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்தும் அரசியல்வாதிகள் எச்சரித்துள்ளனர்.தென் கொரியா உலகின் மெம்மரி சிப்களில் பாதிக்கும் மேலானதைத் தயாரிக்கிறது.

மற்ற இடங்களில், எரிபொருள் ரேஷன் முறை, வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை மற்றும் கல்வி நிறுவனங்களை மூடுதல் போன்ற நடவடிக்கைகளை இலங்கை, வங்கதேசம் மற்றும் பிலிப்பின்ஸ் போன்ற நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ளன.

இரானில் நடத்தப்பட்ட தாக்குதல்

இரானில் நடத்தப்பட்ட தாக்குதல்

ஆனால் இந்த கண்டத்தில் அதிக எரிபொருளைப் பயன்படுத்துபவர்கள் திட்டமிடல் மற்றும் ராஜீய நடவடிக்கை மூலம் ஓரளவு பாதுகாப்பாக உள்ளனர்.

சீனா சில மாதங்கள் பயன்படுத்துவதற்கு இணையான இருப்புகளை வைத்துள்ளதுடன், இரானிடமிருந்து கொள்முதலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிற்கும் இது பொருந்தும், ஏனெனில் அதுவும் ரஷ்யாவை நோக்கித் திரும்புவதற்கான அந்தத் தற்காலிக அனுமதியை பயன்படுத்திக் கொள்கிறது.

என்ன நடக்கும் என்பது நிச்சயமாக இந்தப் போரின் எதிர்கால நகர்வுகளைப் பொறுத்தே அமையும். ஆனால், இரான் மீதான தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னதாகத் திட்டமிடும்போது, இந்த பொருளாதார விளைவுகளில் சிலவற்றை அமெரிக்கா முழுமையாக எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் போர் நீடித்தால், தனிப்பட்ட நாடுகளுக்கு ஏற்படும் சேதம் மட்டுமல்லாமல், அது உலகளாவிய அளவில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

Previous Story

ஈரான்:முதல் முறையாக பச்சைக்கொடி...!!!...???

Next Story

அடி வாங்குகிறார். டிரம்ப்.