இஸ்ரேல்-அமெரிக்கா ஆரம்பித்த போர் 3வது வாரத்தில் நுழைந்துள்ளது. இந்த போர் சீக்கிரம் முடியும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து ஈரான் பெரிதாக கேம் விளையாடுகிறது. அந்த ஜலசந்தியை முடக்குவதாக ஈரான் அறிவித்திருந்தது..

90 கப்பல்கள்
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக முடக்கிவிடவில்லையாம். போர் நடந்து கொண்டு இருந்தாலும் கூட கடந்த 2 வாரங்களில் எண்ணெய் டேங்கர்கள் உட்பட சுமார் 90 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணித்துள்ளன.
இந்த நீரிணை மூடப்பட்டுள்ளது எனக் கூறப்படும் நிலையிலும், ஈரான் மில்லியன் கணக்கான பேரல் எண்ணெய்யைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருவதையே கடல்சார் மற்றும் வர்த்தக டேட்டா காட்டுகிறது..
இந்த காலகட்டத்தில் ஹார்முஸை கடந்து சென்ற பெரும்பாலும் டார்க் கப்பல்களாகவே உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அதைத் தாண்டி அங்கிருந்து கச்சா எண்ணெய் மற்றும் கேஸை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் கப்பல்களே டார்க் கப்பல்கள் என அழைக்கப்படும்.
இவை ஈரானுடன் தொடர்புள்ளவை என கடல்சார் தரவு நிறுவனமான லாயிட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்திற்குத் தொடர்புடைய கப்பல்களாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இந்தியா
மேலும், சில நாட்களுக்கு முன்பு தான் ஈரானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து இந்தியக் கொடியுடன் வரும் கப்பல்களை மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதிப்பதாக ஈரான் அறிவித்தது.
பாகிஸ்தானுக்கும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு நிச்சயம் அனுமதி இல்லை என்பதை ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
என்ன நடக்கிறது!
இந்த காரணமாகக் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கும் மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதே இதற்குப் பிரதான காரணமாகும்.
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நட்பு நாடுகள் மற்றும் வர்த்தக கூட்டாளி நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இருப்பினும், ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட மறுத்துவிட்டன. இதனால் கச்சா எண்ணெய் சப்ளையில் மேலும் பிரஷர் அதிகரித்துள்ளது.
நல்ல லாபம்
அதாவது சுருக்கமா சொல்ல வேண்டும் என்றால் ஈரான் இந்த ஹார்முஸ் ஜலசந்தியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளைப் பயணிக்க விடாத ஈரான், மறுபுறம் தனது நாட்டில் இருந்து 1.6 கோடி பேரல்களுக்கும் அதிகமான எண்ணெய்யை ஏற்றுமதி செய்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையும் இப்போது உயர்ந்துள்ள சூழலில், ஈரான் இதன் மூலம் கணிசமான தொகையை லாபம் பார்த்துள்ளது.




