நஜீப்
(நன்றி: 07.09.2025 ஞாயிறு தினக்குரல்)
இன்று நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவிலும் வஞ்கத்தில் பிழைப்பு நடத்துகின்ற ஒரு கூட்டம் இருப்பது நமக்குத்தெரியும்.
இது ஊடகத்துறைக்கும் பொறுந்தும். நாட்டில் இருக்கின்ற சூடான செய்திகளை வைத்துக் கொண்டு நிறையவே சமூக ஊடகங்கள் நமது கற்பனைக்கு வருகின்ற செய்திகளை உண்மைபோல முண்டியடித்துக் கொண்டு சொல்லி நமது வாசகர் கூட்டத்தை அதிகரிக்க முயல்கின்றன.
இதற்கு நிறையவே பாமர மக்கள் இறையாகி வருகின்றனர். அரசுக்குள் ஜேவிபி-என்பிபி பிளவு. ஹரனி துரத்தப்பட்டு டில்வின் பிரதமராகின்றார் என்று நிறையவே செய்திகள் வந்தன.
அதற்கு வாய்ப்பே இல்லை அவை அரசியல் நோக்கிலான கற்பனைக் கதைகள் என்று நாம் அடித்துச் சொல்லி இருந்தோம்.
அண்மையில் இந்தோனேசியாவில் பிடிக்கப்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டதிலிருந்து விசாரணையின் போது அவர்கள் அப்படிச் சொல்லி இருக்கின்றார்.
இப்படிச் சொல்லி இருக்கின்றார்கள். அவரும் தொடர்பு இவரும் தொடர்பாம் என்று நிறையவே கதைகள்.