பொனி ஜனாதிபதி சவே பிரதமர்!

-நஜீப்-

இது ஒரு பழைய கதைதான், ஆனால் இப்போதுதான் தகவல் வெளியே வந்திருகின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட போது, அது தொடர்பான உண்மையான தகவல்களை  பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த கமல் குனரத்ன மற்றும் சவேந்திர சில்வா ஜனாதிபதிக்குத் தெரிவிக்கவிலை.

ஜனாதிபதி கோட்டா தற்செயலாக ஒரு தனியார் தொலைக் காட்சியைப் பார்த்த போதுதான் தனது மாளிகை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருப்பது தெரிந்தவுடன் அவர் பின் கதவால் ஓடித் தப்பினார் என்று கூறுகின்றார், ஐக்கிய ரனவிரு அமைப்பின் அழைப்பாளியும் நமது மக்கள் சக்தி கட்சியின்  (அபே ஜன பலவேகய) முன்னாள் தேசிய அமைப்பாளரும் இராணுவ அதிகாரியுமான அசேல தர்மசிரி.

ஜனாதிபதியைப் பொது மக்களிடம் சிக்க வைப்பது மேற்குறிப்பிட்ட அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது என்றும் அவர் ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவித்திருக்கின்றார். அப்படி நடந்திருந்தால் பீல்ட் மார்ஷல் ஜனாதிபதியாகவும் இராணுத் தளபதி சவேந்திர சில்வா பிரதமராகவும் அமர்ந்திருப்பார்கள் என்று அவர் அந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிடுகின்றார்.

தற்போது பதவியில் இருக்கின்ற கமல் குனரத்தன மிகவிரைவில் அந்த பதவியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்றும்  குறிப்பிடுகின்றார் தர்மசிரி.

நன்றி: 19.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமீன்!

Next Story

இம்ரான் வீட்டை உடைத்து புகுந்த காவல்துறை!