புரட்சித் தலைவர் புரட்சித் தளபதி அசலும் நகலும் எதிர்பார்ப்புகளும்!

நஜீப் பின் கபூர்

நன்றி: 17.05.2026 ஞாயிறு தினக்குரல்

*****

ஆரம்பத்திலே ஆரோக்கியமும் நிதானமும் காட்டிய முதல்வர் விஜய்.!
சுவையானதும் சீரியசுமான கிசு கிசுக் கதைகளும் கீறல்களும் பார்ப்போம்.!
தமிழகத்திலே மாற்றான் தாயாகிப்போன தமிழ்தாய்-அதிர்ச்சி நிகழ்வு.!

*****

சில தலைப்புக்களில் இருந்து விடுபடமுடியாத நிலமைகள் வருவது பற்றி நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்லி வந்திருக்கின்றோம். அப்படி ஒன்றுதான் தமிழகத் தேர்தலும்நமக்கு ஏற்படுத்தி இருக்கின்றது. அடுத்த வாரத்தில் நாம் விரும்பியோ விரும்பாமலோ இதிலிருந்துவிடுபட வேண்டி இருக்கும்.இப்போது ஒரு புரட்சித் தலைவரும் தளபதியும் தமிழக அரசியலில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி இங்கு பேசலாம் என்று இருக்கின்றோம்.

நாவலப்பிட்டிய பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த ஒரு சிறுவன் இந்தியாவுக்குப் போய் எப்படி ஒரு புரட்சித் தலைவராக மாறினார் என்பது நாம் அறிந்த கதைதான்.அதனைப் பற்றி இங்கு விரிவாக பேச வேண்டியதில்லை. அது பற்றி நிறையவே ஆவணங்களும் பதிவுகளும்இருக்கின்றன.

ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் ஒரு புரட்சித் தலைவருக்கு பதிலாக ஒரு தளபதி முதல்வராக வந்திருக்கின்றார். அவர் பற்றித்தான் இங்கு அதிகம் பேச இருக்கின்றோம். ஆனால் புட்சித் தலைவர் எம்ஜீஆருக்கும் (மருதூர் கோபாலன் இராமச்சந்திரன்) புரட்சித் தளபதி சந்திரசேகரன் ஜோசப் விஜய்க்குமிடையில் நிறையவே இடைவெளிகள் இருக்கின்றன.

புரட்சித் தலைவர் ஆதரவாலர்களிடத்தில் நல்ல அரசியல்; புரிதல் இருந்தது. ஆனால் விஜய் விசிரிகளிடத்தில் அது கிடையாது. இதனை புதிய முதல்வர் விஜய் எப்படி சரி செய்யப் போகின்றார் என்பதனைத்தான் இப்போது அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

புதிய முதல்வர் கால்விலங்கு மாட்டப்பட்ட ஒருவராக அல்லதுமரத்தில் கட்டப்பட்டிருக்கின்ற பசுபோலதான் அவரது செயல்பாடுகளும் அமையப்போகின்றது என்று நாம் எதிர்பார்க்கின்றோம். தனது கழுத்தில் இருக்கும் கயிற்றின் நீளத்துக்கு அமையவே பசு மேய முடியும். அது போன்ற ஒரு நிலையில்தான் நமது முதல்வர் விஜய் நிலமையும் இருக்கின்றது. அது ஒருவகையில்அவருக்குப் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கலாம் என்பதும் நமது கணக்கு.

DMK | Dravida Munnetra Kazhagam

காரணம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு இயக்கமோ தொண்டர்களை வைத்திருக்கின்ற கட்சியோ கிடையாது. அப்படிப்பட்ட ஒரு கட்சியின் கைகளில் அரசியல் அதிகாரம் சென்றடைந்திருக்கின்ற நிலையில் அது அறிந்தோ அறியாமலோ எல்லைகளை மீறிப் போக இடமிருக்கின்றது-தவறுகள் நடக்க வாய்ப்புக்களும் இருக்கின்றன. இது பல களவரங்களுக்கு வழிவகுக்கும். எனவேதான் விஜய்க்கு தமிழக மக்கள் தனிப் பெரும்பான்மையைக் கொடுக்கவில்லையோ என்று நாம் யோசிக்கின்றோம்.

இந்தப் பின்னணியில் அவரது பிரதான அரசியல் எதிரியான திமுக. கூட்டணியில் இருந்த டசன் கணக்கான உறுப்பினர்கள் உதவியுடன் இன்று விஜய் அரசாங்கத்தை அமைத்திருக்கின்றார். இந்த அரசு அமைய நேரடியாகவோ மறைமுகமாகவோ திமுக. உதவி இருக்கின்றது என்றும் நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் பாஜக. ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்ற நல்ல நோக்கமும் அதற்கான அழுத்தங்களும் இதில் இருக்கலாம். இது நியாயமான வாதமும் கூட. அதிமுக.வில் நாம் பாஜக. கூட்டணி போட்டதே தப்பு என்று இப்போது கட்சிக்குள்ளே பகிரங்கமாகப் பேசப்படுவதுடன் அந்தக் கூட்டணியில் இருந்து அதிமுக. உடனடியாக வெளியேற வேண்டும் என்ற போராட்டம் துவங்கி இருக்கின்றது. இதில் எடப்பாடி தலைகூட போகலாம் என்ற ஒரு நிலை அங்கு காணப்படுகின்றது.

அதிமுக. இன்று இரண்டாகப் பிளவு பட்டதும் இந்த பாஜக.வுடன் வைத்த உறவுதான் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. எனவே விஜய் அரசியல் இன்று தமிழக அரசியலைத் தலைகீழாக மாற்றிப் போட்டிருக்கின்றது. இப்போது நாம் முன்பு சொன்ன கால்விலங்கு அல்லது பசுக் கதைக்கு வருவோம். நல்ல அனுபவமும் அரசியல் அறிவுமுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள்,விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் போன்றவை விஜய் நல்லாட்யை முன்னெடுக்க பக்க துணையாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்க முடியும்.

Home

நாமும் இன்றும் விஜய் அரசியல் தொடர்பில் பெரும் சந்தேகத்தில்தான் இருந்து வருகின்றோம். அதனை சரி செய்ய இந்த சிரேஸ்ட கட்சிகளும் தலைவர்களும் விஜய்க்கு உதவக்கூடும். இது அரசு மீது மக்கள் நம்பிக்கையை பாதுகாக்க உதவும்.

எனவே இதனைத் தான் நாம் விலங்கு மாட்டிய முதல்வர் அல்லது மரத்தில் கட்டப்பட்ட பசுவுக்கு நாம் உவமைப்படுத்தி இருக்கின்றோம்.விஜய் நினைத்திருந்தால் அவர் அதிமுக.வில் இருந்து டசன் கணக்கானவர்களைப் பிடுங்கி சுலபமாக சிக்கலில்லாத ஆட்சியை அமைத்திருக்கலாம்.

DMK is our ally in Tamil Nadu: IUML - The Hindu

ஆனால் அங்கிருக்கின்ற மூத்த தலைவர்கள்தான் திமுக.விலிருந்து மேற் சொன்ன தரப்புக்களை உள்வாங்கி ஆட்சி அமைப்பது ஆரோக்கியம் என்று விஜய்க்கு கொடுத்த ஆலோசனைகள்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.அடுத்த தனது அரசியல் எதிரிகளை நேரடியாகப் போய் சந்தித்து அவர்களது ஆதரவைப் பெற்றுக் கொள்ள அவர் எடுத்த முயற்சியும் மிகச் சிறப்பான அரசியல் இராஜதந்திரமாகவே பார்க்கமுடியும்.

தான் பதவியேற்ற முதல் நாளிலே அவர் எடுத்த நடவடிக்கைகள் நல்ல ஆரம்பம். மின்சார கட்டணம், மகளிர் சிங்கப் பாதுகாப்பு செயலணி, போதைக்கு எதிரான நடவடிக்கைளக் குறிப்பாக 717வரையிலான டாஸ் மார்க்-சாராயக் கடைகளை மூட எடுத்த தீர்மானங்கள் நல்ல வரவேற்பபைக் கொடுத்திருக்கின்றது. முன்னைய அரசின் புதுமைப் பெண் தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்கள் தொடரும் என்று முதல்வர் விஜய் சொல்லி இருப்பதும் பாராட்டப்படுகின்றது.

Following CPI(M)'s support to Tamizhaga Vettri Kazhagam(TVK), TVK Chief Vijay visited the Communist Party of India (Marxist) office in Chennai, meeting state leaders including Shanmugam and Ramesh. (Source: CPIM, Tamil Nadu)

அடுத்த மிகவும் செல்வாக்கான அரசியல்வாதியான பிரபாகரை சபாநாயகராகக் கொண்டுவந்தது. தரமான ஒரு செயல். அவர்கூட சிறுபான்மை கிருஸ்தவ சமூகத்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதற்காக தமிழக பெரும்பான்மை சமூகத்வரை நாம் பாராட்ட வேண்டும். பிரபாகரை சபாநாயகராகத் தெரிவு செய்தார்கள் என்பதனை விட இது கூட விஜய் நியமனம்.

இந்த ஆளுமை விஜய்கு நல்ல பாதுகாப்பாகவும் இருக்கும். தமிழக சட்டசபை துவக்க அமர்வுகள் மிகவும் ஆரோக்கியமாக அமைந்திருந்தது. விஜய் அரசியல் முதிர்ச்சியற்ற ஒரு மனிதன். ரசிகர்கள்தான் அவரை முதலமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள். நமது நிலைப்பாடும் அதுதான். இந்த வலுவான விமர்சனத்தை அவர் தகர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. என்பதனையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

AIADMK Collapse: 36 Rebel MLAs Betray EPS to Join Vijay's TV

நாடாளுமன்றத்தில் விஜய் உரையில் பெரிதாக எந்த விமர்சனத்தையும் சொல்வதற்;கில்லை. அனுபவமற்றவராக இருந்தாலும் விஜயின்; அந்த உரையைப் பாராட்டலாம். தனது தெரிவுக்கு பாராட்டு வழங்கியவர்களுக்கு நன்றி சொல்லி சபாநாயகர் பிரபகரர் ஆற்றிய உரை சுப்பர். தனது ஆளுமையையும் அனுபவத்தையும் மீண்டும் ஒரு முறை அங்கு அவர் உறுதி செய்திருந்தார். அவரது உரைபற்றி மற்றுமொரு இடத்தில் பதிந்திருக்கின்றோம்.

தமிழகத்திலே தமிழ் தாய் வாழ்த்துப் பாடலுக்கு மாற்றான் தாய் நிலை வந்ததற்கு என்ன நியாயங்கள் வாதங்கள் சொல்லப்பட்டாலும் அதனை எந்தவகையில் ஏற்றுக் கொள்ள முடியாது. சில தனித்துவங்களை விட்டுக் கொடுப்பது மிகவும் ஆபத்தும் சுயமரியாதை இல்லாத செயலுமாகும்.இப்போது நாம் சுட்டிக்காட்டி இருக்கின்ற கிசு கிசுக் கதைகள் பற்றி பார்ப்போம்.

பதவியேற்கின்ற நிகழ்வில் விஜய் சம்பிரதாயத்துக்கு முரணான சில வடுக்களைவிட்டிருந்தார். இதில் ஒன்று அந்த நிகழ்வில் அவர் அமைதியும் மென்மையுமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் அரங்கில் கைகளை நீட்டி அவரது வழக்கமான பாணியில் பேசியபோது அதனை ஆளுநர் அவருக்கு சுட்டிக்காட்டி இருந்தார். இது சில ஊடகங்களில் பேசப்பட்டது.

இதற்கு அப்பால் விஜய் அங்கு எல்லை மீறிய சந்தர்ப்பங்களும் இருந்தது. அந்த மேடையில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் பதியேற்புக்காக இரு உப மேடைகள் போடப்பட்டிருந்தன. ஆனால் இருமுறை அந்த மேடைகளில் ஆளுநரை முந்திக் கொண்டு விஜய் மேடையில் ஏறி நின்றுகொண்டார். ஆனால் மரியாதைக்காக ஆளுநர் ஏறிய பின்னர்தான் அவர் ஏறி இருக்க வேண்டும். இப்படி இரு முறை நடந்தது. இது ஆர்வக் கோளாரா பெருமையற்ற குணமா என்று தெரியவில்லை.

தனக்குள்ள பெரும்பான்மையை நிலை நாட்டுவதில் மொத்த உள்ள உறுப்பினர்களில் விஜய்க்கு ஆதரவாக 144 வாக்குகள் கிடைத்தது. அவருக்கு எதிராக 22 வாக்குகள் மட்டுமே விழுந்தது. 5பேர் நடுநிலை என்று நின்றனர்.நடுநிலையாக நின்றவர்கள் (பட்டாளிகள் -4 பாஜக-1)பிரதான எதிரணியான திமுக. முதல்வர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பகிஸ்கரித்து வெளியேறி இருந்தனர்.

நாம் முன்பு சொல்லி இருந்ததுபோல இந்தத் தேர்தல் முடிவுகள் அதிமுக.வுக்கு பெரும் சோதனைகளையும் வேதனைகளையும் கொடுத்துக் கொண்டு வருகின்றன. எடப்பாடியின் தலைமை அதிமுகவும் வாக்களிப்பில் இரண்டாக பிளவுபட்டது. பெரும்பான்மையான அதிமுக. உறுப்பினர்கள் சன்முகம் தலைமையில் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இப்போது பிளவுபட்ட அணிகள் ஏட்டிக்குப் போட்டியாக ஊடகச் சந்திப்புக்களை நடாத்திக் கொண்டு வருகின்றனர்.

சட்டசபையில் அதிமுக.வுக்கு யார் தலைவர் என்பதில் பெரும் மோதல். ஏடப்பாடி நான்தான் கட்சியின் செயலாளர் அவர்களின் விண்ணப்பங்களுக்கு கையெழுத்துப் போட்டிருக்கின்றேன் என்று வாதிட, சன்முகம் தலைமையிலான அணியினர் எமக்குத்தான் பெரும்பான்மை எனவே எங்கள் தரப்புக்குக்தான் அதிமுக.தலைமை கிடைக்க வேண்டும்.

அதனை சட்டசபையில் இருக்கின்ற எமது பெரும்பான்மை உறுப்பினர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இதில் நேரடியாக பதில் கொடுக்காமல் சபாநாயகர் பிரபாகர் சட்டத்துறையை நாடி முடிவை எடுத்து வாருங்கள் என்று சொல்லலாம் அல்லது சபாநாயகரே சட்டத்துறையில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும் இடமிருக்கின்றது.

நமது கணக்குப்படி அதிமுக.வில் எடப்பாடிக்கு பின்னடைவு நிலை என்று தெரிகின்றது.எல்லா முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்த விஜய் ஏனோ எடப்பாடியை மட்டும் இதுவரை சந்திக்கவில்லை. அவரையும் சந்தித்திருக்கலாம்.

விஜய் தொடர்ந்தும் அரசியலில் நிலைத்திருக்க வேண்டுமாக இருந்தால் தமது ரசிகர்களை அல்லது விசிறிகளை அரசியல் மயப்படுத்துகின்ற வேலைத் திட்டமொன்றை வடிவமைக்க வேண்டும். ராசிகர்களை வைத்துக் கொண்டு வெற்றிகரமான ஒரு அரசியலை பயணத்தை முன்னெடுக்க முடியாது என்பது நாம் விஜய்க்கு கொடுக்கின்ற ஆலோசனையும் எச்சரிக்கையாகவும் இருக்கின்றது.

இன்று விஜய்க்கு நல்ல அரசியல் சகாக்கள் திமுக. கூட்டணியில் இருந்து கிடைத்திருக்கின்றார்கள்.அவர்களை முதல்வர் பாவித்துக் கொள்ள வேண்டும். அவர்களது ஆலோசனைகளை விஜய் கருத்தில் எடுத்துக் கொள்வார் என்று நாம் நம்புகின்றோம்.

இனி வருகின்ற நாட்களில் திமுக. விஜய்க்கு நல்ல அரசியல் போட்டியாளர்களாக இருப்பார்கள். அதே நேரம் கொள்கை அரசியல் செய்து கொண்டு வரும் சீமான் கூட விஜய்க்கு எதிரான ஒரு பலமான அரசியல் சக்தியாக வளரவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. இது விஜய் விடுகின்ற பலயீனங்களால் வரும் ஆபத்துக்களாக அமையலாம். அடுத்து வருகின்ற நாட்களில் அதிமுக நடக்கின்ற மாற்றங்கள் அல்லது குழப்பங்கள் கூட மேலும் திமுகவையும் சீமானையும் செல்வாக்கான சக்கதிகளாக வளர்த்து விடவும் இடமிருக்கின்றது.

Previous Story

ටිල්වින් සිල්වා අත්අඩංගුවට ගන්නැයි දැනුම් දෙයි !පැමිණිල්ලේ සුළමුල මෙන්න

Next Story

இந்தியா: பெட்ரோல் + டீசல் + கேஸ் தட்டுப்பாடு உதவும் அமீரகம்!