-நஜீப்-
மக்கள் புரட்சி வெற்றி பெற்றிருக்கின்றது. ஆனால் சதி நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவேதான் ரணில் பதில் ஜனாதிபதி.
அவர் அரசியல் யாப்புப்படி ஜனாதிபதியாக தனது நடவடிக்கைகளைத் தொடர்கின்றார். அதே நேரம் அவரை நிரந்தரமாக ஜனாதிபதியாக வைத்திருக்க ஆளும் தரப்பிலுள்ள சிலர் சதி வேலைகளில் இறங்கி வருவதாக பல தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
மக்கள் அங்கீகாரம் இல்லாத ஜனாதிபதியை நாம் ஒரு போதும் அதிகாரத்தில் வைத்திருக்கவோ அவரது அடாவடித்தனங்களை அனுமதிக்கவோ போவதில்லை என ஒன்றிணைக்கப்பட்ட தொழிற் சங்கங்களின் இணை அழைப்பாளி (ஜேவிபி) மஹிந்த சமரசிங்க தெரிவிக்கின்றார்.
இதனால் அடுத்து வருகின்ற நாட்களில் நாம் நாடாளவிய ரீதியில் ரணிலுக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றார்.
ஆசிரிய தொழிற்சங்கத் தலைவரான ஜோசப் ஸ்டாலினும் இதே கருத்தை முன்வைத்து நமது உயிர்கள் பலி போனாலும் இந்த போராட்டம் தொடரும் என்று எச்சரித்திருக்கின்றார்.
நன்றி:17.07.2022 ஞாயிறு தினக்குரல்