புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு!

பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பத்தாவது நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வு 21 நவம்பர் 2024 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2024.09.24 திகதி 2403/13 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட 196 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியலிலிருந்து 29 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கலாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும்.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

இதன்படி, அன்றைய தினம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் விசேட நிகழ்வுகளின் தொடர் காரணமாக நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் முதல் நாள் குறிப்பாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், சபைக்குள் முதன்மையான பொறுப்புகள் நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு | Announcement First Day Session Of New Parliament

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நாளில் குறிப்பிட்ட இருக்கை ஏற்பாடுகள் ஒதுக்கப்படாததால் அவர்கள் விரும்பும் எந்த இருக்கையிலும் அமர அனுமதிக்கப்படுவார்கள்.

சபையில் சூலாயுதம் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, அன்றைய தினம் முதல் அலுவல்களாக, செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

அரசியலமைப்பின் உறுப்புரை 64 (1) மற்றும் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 ஆகியவற்றின் படி, சபாநாயகர் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதன்பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உத்தியோகபூர்வ உறுதிமொழி அல்லது உறுதிமொழியை எடுத்துக்கொள்வார்கள்.

தொடர்ந்து, சபாநாயகர் உத்தியோகபூர்வ சத்தியப் பிரமாணம் செய்வார். துணை சபாநாயகர் மற்றும் துணைக்குழு தலைவர் ஆகியோர் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சபாநாயகர் நியமனம்

நாடாளுமன்றத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரையும் சபாநாயகராகத் தெரிவுசெய்து நியமிக்க முடியும்.

எனினும், உறுப்பினர் குறித்த முன்மொழிவுக்கு அமைய தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த உறுப்பினர் சபாநாயகராகச் சேவையாற்றுவதற்கு விரும்புகின்றாரா என்பதை முன்கூட்டியே நிச்சயப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு | Announcement First Day Session Of New Parliament

எவராவது உறுப்பினர் ஒருவரின் பெயரை சபாநாயகராகத் தெரிவு செய்யுமாறு முன்மொழிய மற்றொருவர் வழிமொழிய வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் விவாதம் மேற்கொள்ள முடியாது.

சபாநாயகர் பதவிக்கு இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் சந்தர்ப்பங்கள் இரண்டு நாடாளுமன்ற முறைமையில் காணப்படுகின்றன.

அவையாவன, சபாநாயகர் தெரிவு, பிரதிச் சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு போன்றவற்றின் போதும், நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்திலுமாகும்.

வாக்குச்சீட்டொன்று வழங்கப்படும்

அவ்வாறான வாக்கெடுப்பின் போது ஐந்து நிமிடங்கள் வாக்களிப்பு மணி ஒலிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்காக சபையில் சமுகமளித்திருக்கும் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகரிடமிருந்து வாக்குச்சீட்டொன்று வழங்கப்படும்.

இந்த வாக்குச்சீட்டில் சபாநாயகராகத் தெரிவுசெய்ய விரும்பும் நபரின் பெயர் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினரின் கையொப்பம் என்பன இடப்பட்டு வெளியில் தெரியாதவாறு மடிக்கப்பட்டு வாக்குப்பெட்டியில் இடவேண்டும்.

புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு | Announcement First Day Session Of New Parliament

எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குச்சீட்டில் வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கையொப்பம் இடப்பட்டிருக்காவிட்டால் அவை செல்லுபடிற்ற வாக்குகளாகக் கணக்கெடுக்கப்படும்.

சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்ற உறுப்பினரின் வாக்குகள் நீக்கப்பட்டு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் சபாநாயகராகத் தெரிவு செய்யப்படுவார்.

பெயர் அட்டவணை எனும் புத்தகம்

நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட் உறுப்பினர்கள் அனைவரும் முதலாவது நாள் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் அட்டவணை எனும் புத்தகத்தில் கையொப்பமிடுதல் வேண்டும்.

புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு | Announcement First Day Session Of New Parliament

இதில் சபாநாயகர் முதன்முதலில் கையொப்பமிடுவார் என்பதுடன், அடுத்து பிரதமர் கையொப்பமிட்டதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிடுவது சம்பிரதாயமாகும். இந்தப் பெயர் அட்டவணைப் புத்தகம் பாதுகாப்பான ஆவணமாகப் பேணப்படும்.

அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதியினால் அன்றையதினம் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்படுவதாயின், முதல் நாளின் பிரதான பணிகள் முடிவுக்கு வந்ததும் தற்காலிகமாக சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும்போது ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்குத் தலைமைதாங்கி கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்த முடியும்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தை அடுத்த அமர்வு தினத்துக்கு ஒத்திவைப்பார்.

Previous Story

SJB-SLMC கூட்டணி முறிந்தது!

Next Story

2024 இன ரீதியாக வாக்காளர்