-நஜீப்-
நெடுநாளாக இன்று நடக்கும் நாளை நடக்கும் என்று எதிர்பார்த்த புதிய அமைச்சர்கள் நியமனம் மிக விரைவில் நடக்கும் என்று நமக்குத் தெரிய வருகின்றது. அதன் படி ஆளும் தரப்பு கட்சிகளில் உள்ள பத்துப் பேருக்கும் எதிரணியில் இருக்கின்ற இரண்டு பேருக்கும் இப்படி அமைச்சு நியமனங்கள் கிடைக்க இருப்பதாகத் தெரிகின்றது.
ஆளும் கட்சி சார்பில் வஜிர அபேகுனவர்தன, ரோஹித்த அபேவர்தன, ஜென்ஸ்டன் பர்னாந்து, மஹிந்தானந்த அலுத்கமகே, எஸ்.பி.திசாநாயக்க, ஆகியோருக்கும் நிச்சயம் இடம் என்று தெரிகின்றது. நாமலுக்கும் அமைச்சுக் கொடுப்பது தொடர்பாகவும் அழுத்தங்கள் என்று கேள்வி.
சிறுபான்மை இனத்தவருக்கும் ஒரு இடம் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரம் பல அமைச்சுக்கள் கை மாற்றம் செய்யப்பட இருக்கின்றது. தற்போதய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தற்போது பார்க்கின்ற அமைச்சும் கைமாற இருக்கின்றது.
நன்றி: 26.03.2023 ஞாயிறு தினக்குரல்