புதிதாக வரும் லைப்சிடி!

நஜீப்  

நன்றி: 13.09.2026 ஞாயிறு தினக்குரல்

அரசு தனது ஈராண்டு நிறைவுப் பேரணிகளை நடாத்தி வருகின்றது. அதற்காக சில நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. நாட்டில் புதிதாக இருபத்தி ஆறு நகரங்களை (லைப்சிடி) அரசு விருத்தி செய்ய இருக்கின்றது அல்லது மாற்றி அமைக்க இருக்கின்றது.

மாத்தளை ஹட்டன் வவுனியா சிலாபம் போன்ற நகரங்களும் இதில் அடங்கும். அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நிதி நிலை மிகவும் வலுவாக இருக்கின்றது.

மக்கள் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் வரிப்பணங்களைச் செலுத்தி அரசுக்கு ஒத்துழைத்து வருவதாகவும் அரச தரப்பினர் கூறி வருகின்றார்கள்.

நாட்டில் சொந்தப் பணத்தில் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. சம்பள அதிகரிப்பும் கிடைக்கும் என ஆளும் தரப்பினர் கூறினாலும் எதிர்க் கட்சிகளோ அரசு மக்களை ஏமாற்றுகின்றது என்று மறுக்கின்றார்கள். மக்கள் தான் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.

Previous Story

මෙවැනි හරක් ...!

Next Story

'අපේ ආණ්ඩුව' - 'වසර දෙකයි - රටට සුබයි' | නොච්චියාගම මහා රැලිය