புதிதாக வரும் அமைச்சர்கள்!

-நஜீப்-

நெடுநாளாக எதிர்பார்த்திருந்த அமைச்சுக்களை தொடர்ந்தும் வழங்காமல் தட்டிக் கழிக்க முடியாது என்று ரணில் தனது சகாக்களிடம் கூறி இருக்கின்றார். பசில் பத்துப் பேரின் பட்டியலைக் கொடுத்து அமைச்சுக் கோட்டாலும் தற்போது வெளிநாட்டில் இருக்கின்ற ஜனாதிபதி நாடு திரும்பியதும் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த ஆறு பேருக்கு அமைச்சு என்பது உறுதி என்று தெரிகின்றது.

President to present Budget 2023 today | Daily News

அந்தப் பட்டியலில் ஜொன்ஸ்டன், மஹிந்தானந்த, ரோஹித்த, சந்திரசேன, நாமல், அடுத்தவர் யார் என்பதில் பெரும் இழுபறி. அத்துடன் ஐதேக. வஜிரவுக்கும் ஒரு கனதியா அமைச்சுப் பதவி கிடைக்க இருக்கின்றது. இந்த அமைச்சுக்களை கொடுக்கின்ற போது அமைச்சுக்களை எதிர்பார்த்திருக்கின்ற பெரும் எண்ணிக்கையானவர்களும் தற்போது அமைச்சுக்களை வகிக்கின்றவர்களின் அதிகாரமும் திணைக்களுங்களும் பங்கிடப்படும் போது இன்னும் பலரும் அரசுடன் முரண்பட நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இதனால் இந்த அரசாங்கத்தின் ஆயுள் தொடர்பில் ஒரு அச்சம் ரணிலுக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் இருந்து வருகின்றது. இன்னும் மொட்டுக் கட்சியில் இருக்கின்றவர்களை எவ்வளவு காலத்துக்கு தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதில் ராஜபக்ஸாக்களுக்கு ஒரு பயம் இருக்கின்றது.

நன்றி: 25.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

புதினுக்கு புதிய நெருக்கடி 'வாக்னர்' பின்புலம் என்ன?

Next Story

பீரிக்சில்  பிரான்சுக்கும் வாய்ப்பு!