பீரிக்ஸ் மாநாட்டில் புடின் இல்லை.!

TOPSHOT - Russian President Vladimir Putin sunbathes during his vacation in the remote Tuva region in southern Siberia. The picture taken between August 1 and 3, 2017. / AFP PHOTO / SPUTNIK / Alexey NIKOLSKY

-யூசுப் என் யூனுஸ் –

BRICS in Africa: “You are either at the table or on the menu” - AIDC | Alternative Information & Development Centre

தென் ஆபிரிக்க ஜோஹனஸ்பேக்கில் நடக்கின்ற பீரிக்ஸ் நாடுகளின் கூட்டத் தொடரில் ரஸ்ய அதிபர் புடின் கலந்து கொள்ள மாட்டார். அவருக்கு உக்ரைன் போர் காரணமாக சர்வதேச நீதி மன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதால் இந் நிலை என்று தெரிகின்றது.

இதனை தென் ஆபிரிக்க ஜனாதிபதி அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது. ஆனால் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் லவ்ரோவ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றார். உக்ரைனில் நடக்கின்ற போரில் ஆயிரக் கணக்கான சிறுவர்களை ரஸ்யா கடத்திக் கொண்டு சென்றிருக்கின்றது.

பெருந் தொகையான குடிமக்களை கொன்று குவித்திருக்கின்றது. எனவேதான் இந்த முறைப்பாட்டை சர்வதேச நீதி மன்றத்தின் முன்னால் உக்ரைன் கொண்டு வந்தபோது அதற்கு மேற்கு நாடுகள் ஆதரவு கொடுப்பதால், புதினுக்கு நெருக்கடி. அப்படி புதின் தென் ஆபிரிக்கா வரும் போது கைதானால் அது உலகப் போருக்கான பிரகடணமாகவிடும்.

புடினின் தற்போதய நிலைப்பாட்டால் இது தற்போது தவிர்க்கப்பட்டிருக்கினறது. இது நமக்கு நிம்மதி என்று தென் ஆபிரிக்க கருதுகின்றது.

நன்றி: 23.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சாம்பலாகிறது ரஜிவ்-ஜே.ஆர் உடன்பாடுகள்!

Next Story

ராஜித அதிரடி ஆட்டம்