பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! பின்னணி

பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் திலினி பிரியமாலியின் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு 12 ஆவது முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜானகி சிறிவர்தன மற்றும் திலினி பிரியமாலி ஆகியோர் அமெரிக்க டொலர்களை தருவதாக கூறி வெள்ளவத்தையில் உள்ள பிரபல கையடக்க தொலைபேசி வர்த்தகர் ஒருவரிடம் 4 கோடி ரூபாவை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளது.

கடந்த மே மாதம் ஜானகி சிறிவர்தன, வெள்ளவத்தையில் உள்ள பிரபல கையடக்கத் தொலைபேசி வர்த்தகர் ஒருவருக்கு, கொழும்பு கோட்டையிலுள்ள கிறிஸ் குழும அலுவலகத்திற்கு கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு வருமாறு அறிவித்துள்ளார்.

இதன்போது குறித்த இடத்தில் திலினி பிரியமாலி மற்றும் இருவர் அங்கு இருந்ததாகவும், திலினி அமெரிக்க டொலர் நோட்டுகளை அந்த இருவரிடமும் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! பின்னணியில் வெளியான தகவல் | Massive Financial Fraud Thilini Priyamali

உயர்மட்ட அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான டொலர்கள்

இதன்போது ஜானகி குறித்த தொழிலதிபரிடம் திலினியிடம் போதுமான டொலர்கள் இருப்பதாகவும், தேவைப்பட்டால் மேலும் கொடுக்கலாம் என்றும், உயர்மட்ட அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான டொலர்கள் போராட்டத்தால் வைத்திருக்க முடியாத காரணத்தால் கொடுக்கப்படுவதாகவும் ஜானகி தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாட்டில் டொலர் நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தேவைப்பட்டதன் காரணமாக வர்த்தகர் 4 கோடி ரூபாவை திகோ குழுமத்தின் கணக்கில் வரவு வைத்துள்ளார்.

கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! பின்னணியில் வெளியான தகவல் | Massive Financial Fraud Thilini Priyamali

அதன்படி கடந்த மே மாதம் 8ஆம் திகதி கிறிஸ் கட்டிடத்தில் ஜானகி சிறிவர்தன மற்றும் திலினி பிரியமாலி முன்னிலையில் இந்த தொகை கைமாறியுள்ளதுடன் பணப்பரிமாற்ற கணக்கு பதிவுகளும் உள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரிடமிருந்தும் அமெரிக்க டொலர்கள் கிடைக்காததால், இந்த தொழிலதிபர் பலமுறை கிரிஷ் கட்டிடத்திற்கு சென்று பணத்தை கேட்டுள்ளதுடன்,  அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பொரளை சிறிசுமண தேரரும் கிறிஸ் அலுவலகத்தில் இருந்ததாக வர்த்தகர் குறிப்பிட்டுள்ளார்.

4 கோடி ரூபா மோசடி

அன்றைய தினம் ஜானகிக்கு விற்பனை செய்வதற்காக வேறொரு கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் சென்றதாகவும், ஐபோன் தேர்டீன் ப்ரோ மேக்ஸ் கையடக்கத் தொலைபேசியை துறவிக்கு வழங்குமாறு ஜானகி கூறியதாகவும் வர்த்தகர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட 4 கோடி ரூபா பணம் செலுத்தாதது தொடர்பில் வர்த்தகர் திலினிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ​​தன்னிடம் தங்கம் இருப்பதாகவும் அதனை வழங்க முடியும் எனவும் திலினி பிரியமாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! பின்னணியில் வெளியான தகவல் | Massive Financial Fraud Thilini Priyamali

திலினி பிரியமாலியும் தங்கத் துண்டுகள் என்று கூறி அந்த தொழிலதிபருக்கு தங்கத் துண்டுகளுடன் சில புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

பின்னர், கடவத்தையில் உள்ள சிறிசுமண தேரருக்கு சொந்தமான வடசித்தி விகாரைக்கு வர்த்தகரை அழைத்துச் சென்ற ஜானகி சிறிவர்தன, அங்குள்ள தங்கக்கட்டி ஒன்றை பார்ப்பதற்காக சென்றுள்ளார். தங்கக்கட்டி சுமார் 5 கிலோ எடை கொண்டதாக துறவி கூறியுள்ளார்.”திலினி அக்கா இந்த தங்கக்கட்டியை கொடுக்கச் சொன்னாள். ஆனால் இன்று மந்திரம் சொல்லி கொடுக்க முடியாது. மூன்று நாட்களில் தருகிறேன்.” என சிறிசுமண தேரர் அங்கு தெரிவித்ததாக வர்த்தகர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு தங்கம் தேவையில்லை என்றும், தான் கொடுத்த 4 கோடி ரூபாய் தான் வேண்டும் என்றும் கூறியதாக தொழிலதிபர் கூறியுள்ளார்.

திலினி மற்றும் ஜானகிக்கு கிடைத்த பணத்தை தருவதாக பிக்கு கூறியதாகவும், ஆனால் பின்னர் அவர் தனது தொலைபேசி அழைப்புகளை முடக்கியதாகவும் வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

10.15 மில்லியன் ரூபா காசோலை கணக்கில் வரவு

இது குறித்து தொழிலதிபர் திலினியிடம் தெரிவித்ததையடுத்து, பிக்கு நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் பொரளை சிறிசுமண தேரரின் புகைப்படத்தை சம்பந்தப்பட்ட வர்த்தகருக்கு அனுப்பி போராட்ட காலம் காரணமாக பணத்தை வழங்குவதை தொடர்ந்து தவிர்த்து வந்த திலினி பிரியமாலி, பின்னர் 5 தடவைகளில் தனது திகோ குழுமத்தின் வங்கி கணக்கிலிருந்து 10.15 மில்லியன் ரூபா காசோலைகளை தொழிலதிபரின் கணக்கில் வரவு வைத்துள்ளார்.

கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! பின்னணியில் வெளியான தகவல் | Massive Financial Fraud Thilini Priyamali

இருப்பினும் திலினி பிரியமாலி வரவு வைக்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் விலைமதிப்பற்ற காசோலைகள் என அந்த தொழிலதிபருக்கு அவரது கணக்கு வைத்திருக்கும் வங்கி தெரிவித்துள்ளது.

குறித்த தொழிலதிபருக்கு தொடர்ந்தும் பணம் வழங்கப்படாமையால் ஜானகி சிறிவர்தன அவருக்கு பணம் தருவதாக உறுதியளித்துள்ளதுடன், கடந்த 4 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (10) கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

திலினியின் கணக்குகளுடன் 4 தனியார் வங்கிகளின் கணக்குகளை சரிபார்க்கவும் குற்றப்புலனாய்வுத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Previous Story

பாக்.வெற்றி  ரகசியம்!

Next Story

நெரிசலில் மரணித்த ஜினாத் கொரியரா!