பிரித்தானிய அரசியல் களம் – ரிஷி சுனக்கிற்கு பெரும் பின்னடைவு

இறுதி போட்டியில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் போட்டியிடும் நிலையில், முன்னாள் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தனது ஆதரவை லிஸ் ட்ரஸூக்கு வழங்கியுள்ளார்.

சூடு பிடிக்கும் பிரித்தானிய அரசியல் களம் - ரிஷி சுனக்கிற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு | Javid Backs Truss For Party Leader

இது ரிஷி சுனக்கிற்கு பெரும் அடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் இன்று மாலை தி டைம்ஸில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியபோது, ​​சுனக்கின் பொருளாதாரக் கொள்கைகளைத் தாக்கி பேசியிருந்தார்.

ரிஷி சுனக் வரிகளைக் குறைக்க மறுத்ததால், இங்கிலாந்து ஒரு நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரமாக மாறும் அபாயம் உள்ளது என சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

வரி குறைப்பு அவசியம்

அதேசமயம், ட்ரஸ்ஸிடம் “தைரியமான நிகழ்ச்சி நிரல்” இருப்பதாகவும், அது தொழிற்கட்சியை தோற்கடித்து பிரித்தானியாவை நடுத்தர வரிசையில் நழுவவிடாமல் காப்பாற்றும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்மிடம் வளர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே வரிக் குறைப்புக்கள் வரும் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு நேர் எதிரானது – வரி குறைப்புக்கள் வளர்ச்சிக்கு ஒரு முன்நிபந்தனை.

சூடு பிடிக்கும் பிரித்தானிய அரசியல் களம் - ரிஷி சுனக்கிற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு | Javid Backs Truss For Party Leader

இப்போது வரி குறைப்பு அவசியம். அரசாங்கத்தில் ஆபத்து இல்லாத விருப்பங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், என் பார்வையில், வரிகளை குறைக்காதது இன்னும் பெரிய ஆபத்தை கொண்டுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் ஜூன் மாதம் போரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஒரே குடும்பத்தில் 4 வைத்தியர்கள் !

Next Story

இலங்கையில் உள்நாட்டு போர்: காரணம் - இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்