பிரதமர் மோடிக்கு எதிராக முடிவு.. யார் இந்த அமெரிக்க பெண் எம்பிக்கள்!

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள நிலையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டின் இரண்டு பெண் எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர். ரஷிதா த்லைப் மற்றும் இல்ஹான் உமர் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்திருப்பது சலசலசப்பை ஏற்படுத்தி உள்ளது.

CNN on Twitter: "HISTORIC FIRSTS: Michigan Democrat Rashida Tlaib and Minnesota Democrat Ilhan Omar will become the first Muslim women elected to Congress, CNN projects https://t.co/RZidiUT9lo #CNNElection https://t.co/spO52EVFw8" / Twitter

இந்த இரண்டு அமெரிக்க பெண் எம்பிக்களும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இல்ஹான் உமர் எம்பி அமெரிக்க அரசியலில் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினராக பார்க்கப்படுகிறார். அவரை பற்றியும் அவர் என்ன கூறினார் என்பதையும் இப்போது பார்ப்போம். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு நேற்று (செவ்வாய்கிழமை) புறப்பட்டு சென்றார். 21, 22, 23 ஆகிய தேதிகளில் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் இன்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

நாளை அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு சார்பில் விருந்து அளிக்க உள்ளார்கள். மேலும் நாளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற போகிறார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டின் இரண்டு பெண் எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர். ரஷிதா த்லைப் மற்றும் இல்ஹான் உமர் ஆகிய இரண்டு அமெரிக்க பெண் எம்பிக்களும் பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி பிரதமர் மோடியின் உரையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

அமெரிக்க எம்பி ரஷிதா த்லைப் ட்விட்டரில் கூறுகையில், “மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவத, முஸ்லிம்கள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைப்பது, பத்திரிகையாளர்களை தணிக்கை செய்வது போன்ற செயல்களில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ள மோடிக்கு நமது நாட்டின் தலைநகரில் பேச வாய்ப்பு வழங்கி இருப்பது வெட்கக்கேடானது; அவரது நாடாளுமன்ற கூட்டஉரையை நான் புறக்கணிக்கிறேன்” என்று கடுமையாக கூறியுள்ளார்.

PM Modi US visit: India-US relationship reaching next level, says Ambassador Taranjit Singh Sandhu

அமெரிக்க எம்பி இல்ஹான் உமர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சிறுபான்மை மதத்தினரை அடக்கி ஒடுக்குகிறது, வன்முறையில் ஈடுபடும் இந்து தேசியவாதக் குழுக்களைத் தூண்டி விடுகிறது, ஊடகவியலாளர்கள்/மனித உரிமை ஆர்வலர்களை குறிவைத்து தாக்குகிறது. எனவே பிரதமர் மோடியின் நாடாளுமன்ற கூட்ட உரையின் நான் பங்கேற்க மாட்டேன்” என்று கூறியுள்ளார். இன்னொரு ட்வீட்டில், பிரதமர் மோடியின் அடக்குமுறை மற்றும் வன்முறை குறித்து விவாதிக்க மனித உரிமை குழுக்களுடன் நான் ஒரு கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவேன்” என்று இல்ஹான் உமர் கூறியுள்ளார் ‛மதவெறுப்பு’ ஏன் என பிரதமர் மோடியிடம் கேட்கணும்!

ஜோபைடனிடம் வலியுறுத்திய வாஷிங்டன் போஸ்ட்-சர்ச்சை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு மினிசோடா மாகாணத்தில் இருந்து 2019ம் ஆண்டு ஜனநாயக கட்சியின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இல்ஹான் உமர். இல்ஹான் உமர் எம்பி மீது அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் அவருக்கு இந்துபோபியா இருப்பதாக (இந்துக்களுக்கு எதிரான மனநிலை இருப்பதாக) குற்றம்சாட்டி வருகின்றன.

Rashida Tlaib and Ilhan Omar's End Child Poverty Act Is a Political and Policy Home Run

ஜனநாயக கட்சி எம்பியான இல்ஹான் உமர், கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிராக இந்தியாவில் அத்துமீறல் நடந்ததாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், மதச்சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் கொண்டு வந்தார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று வந்தார். இந்தியாவிற்கு எதிரான மனநிலை உடையவர் என்றும் முஸ்லிம் அமைப்பினரின் கவனத்தை பெறும் மனநிலை உடையவர் என்றும் குற்றச்சாட்டு இல்ஹான் உமர் மீது வைக்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆதரவு மனநிலை உடையவர் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. அதனால் தான் இல்ஹான் உமர் பிரதமர் மோடியின் உரையை எதிர்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Previous Story

உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுக்க முடியாது.!

Next Story

மாயமான நீர்மூழ்கிக் கப்பல்: தொடரும் தேடுதல்!