பிரசன்ன ரணிலுக்கு ஆப்பு?

-நஜீப்-

அடிக்கடி தனது நிறத்தை மாற்றிக் கொள்வதற்கு பட்சோந்தியை உதாரணம் காட்டுவார்கள். அதனால் பட்சோதிகள் என்று சமூகத்தில் ஒரு கூட்டம் இருந்து வருகின்றது. இன்று மொட்டுக் கட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விசுவாசிகளில் பிரசன்ன ரணதுங்ஹாவுக்கு முதலிடம்.

ரணில் ஜனாதிபதி பிரசன்ன பிரதமர் என்று ஒரு கதை அரசியல் வட்டாரங்களில் இருக்கின்றது. இது  ஓவரான கற்பனைதான். நம்பிக்கையுடன் வாழ்பவர்களை நாம் ஏன் குழப்ப வேண்டும்.? ஆனால்  பசில் ராஜபக்ஸ அமெரிக்காவில் இருந்து காட்டுநாயக்க வந்த போது விமானத்துக்குள்ளேயே போய் அவரது பைகளை-பொதிகளை வெளியில் தூக்கிக் கொண்டு வந்தவர் இந்தப் பிரசன்னதான்.

President, MR, Basil Rajapaksa to Meet Today to Discuss Potential Alliance  for Upcoming Elections

இப்படியான காட்சிகள் எதையும் நாம் ஊடகங்களில் காணவில்லையே என்று தகவல் தந்தவரை கேட்டால், இது விமானத்துக்குளிருந்து வெளியே பசில் வரும் போது நடந்த நிகழ்வு. ஊடகத்தினர் விமான நிலையத்துக்கு வெளியே இருந்ததால் இந்தக் காட்சிகளை  அவர்கள் கண்ணில் படவில்லை.  இந்தத் தகவலைப் பொறுப்புடன் கூறுகின்றேன் என்று சொன்னவர் வேறு யாருமல்ல நமது உதயங்கதான்.

நன்றி: 17.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

குறட்டை விடுவதால்  என்ன ஆபத்து? எப்படித் தடுக்கலாம்?

Next Story

கோட்டா புத்தகமும் பசிலின் தேர்தலும்!